CINEMA

japan movie review நடிகர் கார்த்தியின் ஜப்பான் திரைவிமர்சனம்

actor karthi japan movie review ஜப்பான் திரைவிமர்சனம்

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிபில், ராஜு முருகன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பில் கார்த்தி, அனு இமானுவேல், விஜய் மில்டன், சுனில்,வாகை சந்திரசேகரன், கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் நடிகர் கார்த்தியின் 25 வது திரைப்படம் என்பதால், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

ஜப்பான் திரை விமர்சனம்
ஜப்பான் திரை விமர்சனம்

கதை:- கோயம்புத்தூரில் ஒரு மிகப்பெரிய நகை கடையில் 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை அடிக்கப்படுகிறது. அந்த திருடனை பிடிக்கவும் திருடப்பட்ட நகையை மீட்கவும் போலீசார் மும்முறமாக ஈடுபடுகிறார்கள். அது மட்டும் இல்லாமல் இந்த நகை கடையில் உள்துறை அமைச்சருக்கு (கே.எஸ். ரவிக்குமார்) பங்கு இருப்பதால் போலீசுக்கு அழுத்தம் அதிகமாகவே கொடுக்கிறார்கள். உ

ள்துறை அமைச்சர் இந்த கொள்ளை சம்பவத்தை கண்டறிய ஒரு குழுவை அமைக்கிறார்.சுனில் வர்மா, விஜய் மில்டன் ஆகிய தலைமையிலான போலீஸ் குழுக்கள் விசாரித்துக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு பிரபல திருடன் ஜப்பானை (கார்த்தி) போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனிடையில் கார்த்திக்கு திரைப்பட கதாநாயகியாக நடிக்கும் அனு மீது காதல் ஏற்படுகிறது. பின் அவரை தேடி சூட்டிங் பாட்டிற்கு கார்த்திக் சென்று கொண்டிருக்கும் போது போலீசும் சுத்தி வளைக்கிறார்கள். எப்படியோ கார்த்தி, அனு உடன் தப்பித்து விடுகிறார்.

பல திருட்டுகளில் ஈடுபட்ட அவர் இந்த திருட்டையும் அவர் தான் நடித்திருப்பார் என்று போலிசார் தீவிரமாக தேட ஒரு கட்டத்தில் சிக்கி கொள்கிறார். அதன்பின்பு நகை திருட்டுக்கும் எனக்கும் துளி கூட சம்பந்தம் இல்லை என்றும் இதில் யார் ஈடுபட்டிருக்கிறார் என்பது தனக்கு தெரியும் என வேறு ஒருவரை கை காமிக்கிறார். உண்மையான கொள்ளையாளி யார் மற்றும் திருட்டு போன நகை கிடைத்ததா என்பதுதான் ஜப்பான் படத்தின் கிளைமேக்ஸ்

.actor karthi japan movie review

Related Articles

Back to top button