Jigarthanda DoubleX trailer லாரன்ஸ், எஸ்.ஜே சூர்யா நடிப்பில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் இதோ
Jigarthanda DoubleX Movie ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டிரைலர் இதோ
தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10 ம் தேதி கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாக உள்ல ஜிகர்தண்டா இரண்டாம் பாகத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’ஜிகர்தண்டா’. சித்தார்த் கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில், லட்சுமி மேனன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், மேலும் விரைவில் ஜிகர்தண்டா படத்தின் 2 ம் பாகம் வெளியாகும் என அறிவித்திருந்தார் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
அதன்படி ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் என்று படத்திற்க்கு பெயர் வைக்கப்பட்டு ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, கதாநாயகியாக மலையாள நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் உருவான இப்படத்திற்க்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்
இந்நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. முன்னதாக ஜிகர்தண்டா படத்தில் ’அசால்ட் சேது’ என்ற கதாபாத்திரத்திற்க்காக 2014-ம் ஆண்டு தேசிய விருதை பாபி சிம்ஹா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது
டிரைலர் பார்க்க:-