Joe Movie Review in Tamil ரியோ ஹீரோவாக நடித்துள்ள ஜோ திரைப்பட விமர்சனம்
Joe Movie Review ஜோ திரை விமர்சனம்
Joe Movie Review in Tamil
நடிகர்கள்:-
ரியோ ராஜ், மாளவிகா மனோஜ், பவ்யா த்ரிகா, அன்பு பிரவீணா, இளங்கோ குமணன், சார்லி, அன்புதாசன், விஜே ராகேஷ், ஜெயகுமார், எம்.ஜே.ஸ்ரீராம் மற்றும் பலர்
இயக்கம்:-
ஹரிஹரன் ராம்
இசை:-
சித்துகுமார்
கதை:-
தமிழகத்தில் உள்ள ராமேசுவரத்தில் பள்ளிபடிப்பு படிக்கும் நாயகன் ஜோ (ரியோ ராஜ்), அவரது நண்பர்களும் இளம் விடலை பருவத்தில் பொழுதைக் கழிக்கிறார்கள். பிளஸ்-2 படிப்பு முடித்தபின் நாயகன் ஜோ கோவையில் இன்ஜினியரிங் கல்லூரியில் சேருகிறார்.
அதே கல்லூரியில் நாயகி மாளவிகா மனோஜும் சேருகிறார். ரியோவுக்கு கேரள பெண்ணான மாளவிகாவை கண்டதும் காதல் ஏற்படுகிறது. ஆனால், சுசியிடம் காதலைச் சொல்ல தயங்குகிறார். காரணம், யார் லவ் புரபோஸ் செய்தாலும் உடனே அழ ஆரம்பித்துவிடுவார் சுசி,இதனால் காதலை சொல்ல தயங்கிய ரியோ ஒரு கட்டத்திற்கு மேல் தன்னுடைய காதலை அந்த பெண்ணிடம் சொல்லிவிடுகிறார் ,
இருவருக்கும் காதல் மலர்கிறது. இருவரும் தீவிரமாக துரத்தி துரத்தி காதலிக்கிறார்கள். கல்லூரியும் நான்கு வருடங்கள் முடிந்து விடுகிறது. இருவரும் அவரவர் ஊர்களுக்கு சென்று விடுகின்றனர். அதன்பின்னும் காதல் தொடர்கிறது. பிரிவைத் தாங்கிக்கொள்ள முடியாத சுசி, தன் வீட்டுக்கு வந்து திருமணம் குறித்து தனது பெற்றோர்களிடம் பேசுமாறு கேரளாவிற்க்கு ஜோவை அழைக்கின்றார்.
சுசி வீட்டிற்கு பெண் கேட்டு சென்றபோது அவர்களுடைய குடும்பத்திற்கும், இவர்களுடைய குடும்பத்திற்கும் மாறி மாறி வாக்குவாதம் மற்றும் கைகலப்பு நடைபெறுகிறது. சுசி குடும்பத்தார் ஜோவைத் தாக்கி வெளியே தள்ள முயலுகிறார்கள். இந்த நிகழ்வை பார்க்கும் சுசி, ஜோ தான் தன் அப்பாவை கீழே தள்ளிவிட்டதாக தவறாக நினைத்து, ஆவேசப்பட்டு, இனி என் முகத்தில் விழிக்காதே என்று காதலை முறித்துக்கொள்கிறார். இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது.
இதன் பிறகு ரியோவுக்கும், மாளவிகாவுக்கு தனி தனியாக தங்களுடைய வீட்டில் வேறொருவருடன் நிச்சியதார்தம் நடந்துவிடுகிறது. காதல் தோல்வி விரக்தியில் மதுவுக்கு அடிமை ஆகிறார் ஜோ, இப்படியே போனால் தன் மகன் வாழ்க்கை வீணாகிவிடும் என்று எண்ணிய ரியோ பெற்றோர் அவருக்கு கல்லூரி தாளாளருமான ஸ்ருதி (பவ்யா திரிகா) யை பெண் பார்கின்றார்கள்,
திருமணத்துக்கு முந்தைய தினம் ஸ்ருதி போன் செய்து இந்த கல்யாணத்துல எனக்கு விருப்பம் இல்ல. அதனால நீயே கல்யாணத்தை நிறுத்திடு என்று சொல்லுகிறார். ஆனால் ஜோவின் போனை எடுத்த அவரது நண்பன் குடி போதையில் அவரிடம் கூறமால் விட்டு விடுகிறார். திருமணம் வேண்டாம் என எவ்வளவு சொல்லியும் ரியோ கல்யாணத்தை நிறுத்தவில்லை என வெறுப்புடனேயே குடும்பம் நட்த்துகின்றார் ஸ்ருதி. இதனால் ஜோவை ஸ்ருதி அவமானப்படுத்துகிறார்?
அவற்றை ஜோ எப்படி எதிர்கொள்கிறார்? தன் வாழ்வில் நடந்த துயரத்தை சரி செய்தாரா ஜோ, திருமணத்தை ஸ்ருதி வெறுப்பதற்கு என்ன காரணம்? இறுதியில் இருவரும் இணைந்தார்களா? பிரிந்தார்களா ? என்பது தான் மீதி கதை