CINEMA
junior balaiah passed away நடிகர் ஜூனியர் பாலையா காலமானார் திரையுலகம் சோகம்
junior balaiah ஜூனியர் பாலையா காலமானார்
நடிகர் ஜூனியர் பாலையா உடல்நலக்குறைவால் இன்று சென்னை வளசரவாக்கத்தில் காலமானார்.இன்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில், சென்னை வளசரவாக்கம் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்
தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகர் டி.எஸ்.பாலையாவின் 3வது மகனான ஜூனியர் பாலையா நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் முதன்மை துணை வேடங்களில் நடித்து வந்துள்ளார்.

கரகாட்டக்காரன், கோபுர வாசலிலே, சுந்தரகாண்டம், சாட்டை அம்மா வந்தாச்சு, ராசுக்குட்டிஉள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்தவர்
2010 களில், அரிதாகத் நடிக்க தொடங்கிய ‘சாட்டை’ திரைப்படத்தில் தலைமை ஆசிரியராக நடித்ததற்காக புகழ் பெற்ற இவர், பின்னர் 2015களில், கும்கி, தனி ஒருவன், புலி மற்றும் நேர்கொண்ட பார்வை என முக்கிய நடிகர்களுடன் வெற்றி படங்களில் நடித்து பிரபலமானார்.