CINEMA

Kamal Hassan will not host Bigg Boss பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன் காரணம் இதுதான் கமல்ஹாசன் அறிக்கை

Kamal Hassan will not host Bigg Boss பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன் காரணம் இதுதான் கமல்ஹாசன் அறிக்கை

BiggBoss தமிழ் நிகழ்ச்சியில் இருந்து தற்காலிகமாக விலகுவதாக நடிகர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்பணிச்சுமை காரணமாக வரவிருக்கும் சீசனை தன்னால் தொகுத்து வழங்க முடியாது – நடிகர் கமல்ஹாசன் அறிக்கை

Kamal Hassan will not host Bigg Boss
Kamal Hassan will not host Bigg Boss

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் 2016 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார்.கடந்த 7 ஆண்டுகளாக பொறுப்பு வகித்த பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார்

.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,

கனத்த மனதுடன் இதை அறிவிக்கிறேன். 7 ஆண்டுகால பயணத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து சிறிய ஓய்வை எடுக்கிறேன்..பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து விலகுகிறேன்: கமல்ஹாசன்!ஆவேஷம் ரீமேக்கில் நாயகனாகும் பாலகிருஷ்ணா?பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து கமல்ஹாசன் விலகியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அன்பான பார்வையாளர்களே, 7 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய பிக்பாஸ் பயணத்திலிருந்து ஒரு சிறிய இடைவெளி எடுக்கிறேன் என்பதை கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

சினிமா படங்களில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டதன் காரணமாக, பிக் பாஸ் தமிழ் சீசனின் வரவிருக்கும் சீசனை என்னால் தொகுத்து வழங்க முடியவில்லை.

உங்கள் இல்லங்களில் உங்களைச் சந்திக்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. உங்கள் அன்பையும் பாசத்தையும் நீங்கள் எனக்கு அளித்துள்ளீர்கள். அதற்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களுக்கும் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விஜய் டிவியின் அற்புதமான பிக்பாஸ் குழுவிற்கும், இந்த நிறுவனத்தை மாபெரும் வெற்றியடையச் செய்வதில் ஈடுபட்டுள்ள ஒவ்வொரு குழு உறுப்பினர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். வரவிருக்கும் சீசன் இன்னொரு வெற்றிகரமான நிகழ்ச்சியாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். என தெரிவித்துள்ளார்என் அடுத்தடுத்த திரைப்பட பணிகளால் இந்த முடிவை எடுத்துள்ளேன்.நீங்கள் கொடுத்த அன்பும் ஆதரவும் இந்தியளவில் முக்கியமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இது மாறியது. அடுத்த பிக்பாஸ் சீசனும் பெரிய வெற்றியைப் பெறும். உங்கள் அனைவருக்கும் போட்டியில் பங்கேற்றவர்களுக்கும் என் நன்றியைத் தெரிவிக்கிறேன்.” எனக் குறிப்பிட்டுள்ளார்

Kamal Hassan will not host Bigg Boss

more Details Click Here

https://x.com/ikamalhaasan/status/1820774245816795530/photo/1

Related Articles

Back to top button