kavin next movie Bloody Beggar பிக் பாஸ் கவினின் அடுத்த படமான பிளடி பெக்கர் படத்தை தயாரிக்கின்றார் இயக்குனர் நெல்சன்
kavin next movie Bloody Beggar கவின் படத்தை தயாரிக்கும் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் படத்தின் அறிவிப்பை ப்ரோமோ வீடியோவாக வெளியிட்டுள்ளது பட நிறுவனம்.
தயாரிப்பாளர் அவதாரம் எடுத்துள்ள நெல்சனின் முதல் படத்தில் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். படத்திற்கு BLOODY BEGGER எனப் பெயரிடப்பட்டுள்ளது.
சிவபாலன் முத்துக்குமார் இயக்கும் இப்படத்திற்கு, ‘டாடா’ படத்திற்கு இசையமைத்த ஜென் மார்டின் இசையமைக்கிறார்

இயக்குனர் நெல்சன் அவரது தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். அதற்கு ஃபிலமண்ட் பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளார்.
அந்த நிறுவனம் தயாரிக்கும் முதல் படத்தின் தகவலை இன்று வெளியிட்டார். நெல்சன் தயாரிப்பில் கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனரான சிவபாலன் முத்துகுமார் இயக்கவுள்ளார். இவர் இதற்கு முன் நெல்சன் திலிப்குமாரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார்.படத்திற்கு “Bloody Beggar” என தலைப்பிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் டைட்டில் ரிவீலிங்க் வீடியோவை நகைச்சுவை பாணியில் நெல்சன், ரெடின் கிங்ஸ்லி, கவின், சிவபாலன் ஆகியோர் நடித்து வெளியிட்டுள்ளனர்.
கவின் தற்பொழுது நடித்து இருக்கும் ஸ்டார் படம் வரும் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களத்தில் நடித்து வருகிறார் கவின்

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
kavin next movie Bloody Beggar
#Kavin's #BloodyBegger produced by #Nelson. 🥳🔥🔥pic.twitter.com/O0a4tEoQNI
— Vakugu (@vakugu) May 3, 2024