CINEMANATIONAL NEWS

Kerala Police Files Case Against YouTubers கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு

Rahel Makan Kora யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு

கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு

கேரளாவில் ரஹேல் மக்கன் கோரா Rahel Makan Kora என்ற மலையாள படத்தின் இயக்குநர் உபைனி அளித்த புகாரின் பேரில் கேரளாவில் 7 யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு
யூடியூப் சினிமா விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு

கேரளாவில் பிரபல இயக்குனர் உபைனி இயக்கிய ரஹேல் மக்கன் கோரா கடந்த அக்டோபர் 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது மேலும் இந்தப் படத்துக்கு சில யூடியூப் சேனல்களில் வேண்டுமென்றே எதிர்மறையான விமர்சனங்களை அளித்ததுடன், மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டதாக யூடியூப், பேஸ்புக் சினிமா விமர்சகர்கள் மீது இயக்குநர் உபைனி கொச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அவரின் புகாரின் பேரில் அருண் தரங்கா, அஸ்வந்த் கேஓகே, ஃபேஸ்புக் பயனர்கள் மற்றும் யூடியூப் சேனல்களான என்வி ஃபோகஸ், ட்ரெண்ட் செக்டார் 24X7 உள்ளிட்ட ஆன்லைன் விமர்சகர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் அரோமலிந்தே ஆத்யதே பிராணாயாம்’ (Aromalinte Aadyathe Pranayam) என்ற மலையாள படத்தின் இயக்குநர் முபீன் ரவூப் கேரள உயர் நீதிமன்றத்தில் படம் வெளியாகி 7 நாட்களுக்கு திரைப்பட விமர்சகர்கள், சமூக ஊடகத்தில் யாரும் படம் குறித்த விமர்சனங்களை வெளியிடக் கூடாது’ என தெரிவித்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் இதுபோன்ற விவகாரங்களில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், படத்துடன் தொடர்புடைய பிற நபர்கள் அளிக்கும் புகாரில் குற்றவியல் மற்றும் சைபர் குற்றங்கள் தொடர்பான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து முறையான விசாரணை நடத்த வேண்டும் என காவல் துறைக்கு உத்தரவிட்டிருந்தது குறிப்பிடதக்கது

Related Articles

Back to top button