Lal Salaam movie review நடிகர் ரஜினிகாந்தின் நடிப்பில் லால் சலாம் படம் எப்படி இருக்கு திரை விமர்சனம்
Lal Salaam movie review ஐஸ்வர்யா இயக்கத்தில் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘லால் சலாம்’ படம் திரையரங்குகளில் இன்று வெளியானது
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா 3, வை ராஜா வை ஆகிய படங்களை தொடர்ந்து லால் சலாம் படத்தை தற்போது இயக்கி வருகின்றார். எட்டு ஆண்டுகளுக்கு பிறகு ஐஸ்வர்யா மீண்டும் இயக்குனராக லால் சலாம் படத்தின் மூலம் களமிறங்குகிறார்.‘லால் சலாம்’ படத்தில் ‘மொய்தீன் பாய்’ என்ற கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்,மேலும் முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
நடிகர்கள்:-
விக்ராந்த்
விஷ்ணு விஷால்
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்
அனந்திகா சனில்குமார்
தங்கதுரை
ஜீவிதா
செந்தில்
தம்பி ராமையா
விவேக் பிரசன்னா
கபில் தேவ்
இசை:-
ஏ.ஆர். ரஹ்மான்
இயக்கம்:-
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
படத்தின் கதை:-
ஒரு ஊரில் நடக்கும் தேர் திருவிழா மற்றும் அந்த ஊரில் நடக்கும் கிரிக்கெட் போட்டியில் நடக்கும் பிரச்சினை காரணமாக அந்த ஊரில் நடக்கும் பிரச்சனை தான் படத்தின் கதை
மேலும் விளையாட்டில் அரசியல் கலந்தால் என்னமாதிரியான விளைவு ஏற்படும் என்பதும் இந்தப் படம் கூறுறுவதாக அமைந்துள்ளதுளார்.
1993ஆம் ஆண்டில் இருந்து தொடங்குகின்றது கதை முரார்பாத் என்ற கிராமத்தில் இந்துக்களும் – முஸ்லீம்களும் ஒற்றுமையோடும் மதநல்லிணக்கத்தோடு பாகுபாடு பார்க்காமல் அண்ணன், தம்பி போல் வாழ்ந்து வருகிறார்கள்
அதில் மொய்தீன் பாய் ரஜினிகாந்த் மற்றும் அவரது நண்பர் லிவிங்ஸ்டன் இருவரும் ஒற்றுமையாக பழகி வருகிறார்கள். அந்த கிராமத்தில் மக்கள் ஒற்றுமைக்காக ரஜினிகாந்த் ஓர் கிரிக்கெட் அணியை துவங்குகின்றார் அதன்பெயர் 3 ஸ்டார். 3ஸ்டார் அணி கிரிக்கெட் டீமின் நட்சத்திர ஆட்டகாரர் விஷ்ணு விஷால்
மொய்தீன் பாய் மகன் விக்ராந்த் சிறு வயதில் இருந்தே விஷ்ணு விஷாலுக்கும் விக்ராந்துக்கும் செட் ஆகாது இருவரும் பார்க்கும் போதெல்லாம் சண்டை போட்டு கொள்கிறார்கள்.2
விஷ்ணு விஷால் திடீரென இதிலிருந்து வெளியேறிய, MCC என்ற அணிக்கு கேப்டன் ஆகிறார்.அதன் பின்னர் அந்த டீம் தான் வெற்றி பெறுகிறது. 3ஸ்டார் அணியை வெற்றி பெற வைக்க மும்பையில் இருக்கும் மொய்தீன் பாய் மகனான விக்ராந்த்-ஐ அழைத்து வந்து 3 ஸ்டார் அணியில் விளையாட வைக்க வேண்டும் என முடிவு செய்கிறார்கள். விக்ராந்த் இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட வேண்டும் என்ற கனவுடன் முயற்சி செய்து வருகிறார்.
மத்தியில் கிரிக்கெட் விளையாட்டினால் ஏற்படும் சின்ன மனஸ்தாபத்தை, அங்குள்ள சிலர் பயன்படுத்தி அங்குள்ள அரசியல்வாதி தனக்கு சாதகமாக மாற்ற, இரு பிரிவினருக்கும் இடையில் மதக் கலவரத்தை தூண்டுகின்றார்.இதனால் ஒற்றுமையாக இருந்த இரு பிரிவினருக்கும் இடையில் பெரும் வன்முறை ஏற்படுகின்றது.
இதற்க்கிடையில் விஷ்னு விஷால் காதல் அவரது தந்தையான அந்த அரசியல்வாதிக்கு தெரியவர இதனால் ஊர் திருவிழாவுக்கு தேரை தர மறுக்கிறார். கோயிலுக்கு புதிய தேர் வாங்கினார்களா. விக்ராந்த விஷ்ணு விஷால் ஏன் சண்டை போடுகின்றனர், அதற்க்கு காரணம் என்ன, ஊர்கார்ரகள் ஒற்றுமையாக ஆனார்களா,மதநல்லிணக்கம் ஏற்பட்டதா,விளையாட்டில் அரசியல் புகுந்தால் விளையாட்டு வீரரின் வாழ்க்கை என்னவாகும்..! அதன் விளைவுகள் என்னென்ன? இது அனைத்தையும் மொய்தீன் பாய் எப்படி சரி செய்தார் என்பது தான் படம்
Lal Salaam movie review