Latest Tvk Tamil News வதந்திகளை யாரும் நம்பாதீங்க தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் வேண்டுகோள்
Latest Tvk Tamil News வதந்திகளை யாரும் நம்பாதீங்க தொண்டர்களுக்கு தமிழக வெற்றிக் கழகம் வேண்டுகோள் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் இந்த படிவம் பொய்யானது என கட்சியின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதி நடிகர் விஜய் கட்சியை தொடங்கியதை அடுத்து, கட்சியின் செய்லபாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமீபத்தில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில், கட்சியின் தலைவர் விஜய் காணொளி வாயிலாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கியதாக கூறப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்துள்ள நிலையில், கட்சியின் உறுப்பினர் சேர்க்கை படிவம் ஒன்று இணையத்தில் பரவி வந்துள்ளது. இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க கட்சி சார்பில், அறிமுகம் செய்யப்பட உள்ள செயலி மூலம் மட்டுமே நடைபெறும். தற்பொழுது, சமூக வலைத்தளங்களில் உறுப்பினர் சேர்க்கை படிவம் என பரவி வரும் படிவம் பொய்யானது என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்ட்டுள்ளது
மேலும் நடிகர் விஜயின் த.வெ.கவின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் அறிவிப்புகள் தவிர்த்து, யூகத்தின் அடிப்படையில், விஷமத்தனமாக பரப்பப்படும் செய்திகளை யாரும் நம்ப வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல் ஏற்கனவே அறிவித்ததுபோல் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பிறகு தான் கட்சி சார்பாக மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும் என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது