Lucky Bhaskar Review துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரை விமர்சனம்
Lucky Bhaskar Review துல்கர் சல்மான் நடிப்பில் லக்கி பாஸ்கர் திரை விமர்சனம்
துல்கர் சல்மான் ,மீனாட்சி செளத்ரி, ராம்கி ,ராஜ்குமார் காசிரெட்டி, சாய் குமார், ஹைப்பர் ஆதி, சச்சின் கெடேகர், சூர்யா ஸ்ரீனிவாஸ் மற்றும் பலர் நடிப்பில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில் வெளியாகி உள்ள படம் தான் லக்கி பாஸ்கர்

கதை:-
மும்பையில் இயங்கி வரும் மகதா வங்கியில் கேஷியராக பணிபுரிபவர் பாஸ்கர் குமார் (துல்கர் சல்மான்). நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் தான் குடும்பத்தில் மூத்த பையன். மனைவி, மகன், தம்பி, தங்கை, உடல்நிலை சரியில்லாத அப்பா என மொத்த குடும்பத்தையும் கரை சேர்க்கும் பொறுப்பும் இருக்கிறது. மாதம் 6 ரூபாய் சம்பளம், கடனோ 16 ஆயிரம் ரூபாய். கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருக்கும் அவருக்கு 16 ரூபாய் சம்பளம் கிடைக்கும் உதவி மேலாளர் பணியிடம் கிடைத்துவிடும் என்கிற நம்பிக்கை. ஆனால் அது வேறு ஒருவருக்குச் செல்கிறது இதனால் மனமுடைந்து போகின்றார்.
கடன் நெருக்கடியால் நேர்மையை தவறும் சூழல் உருவாகின்றது வங்கி பணத்தினை யாருக்கும் தெரியாமல் எடுத்து 2 லட்சம் ரூபாயை தன்னிடம் தொடர்ந்து கடன் கேட்டு நச்சரித்து வந்த ராம்கியிடம் தருகிறார்.அவரும் வெளிநாட்டு டிவிகளை இறக்குமதி செய்து, அதில் கிடைத்த லாபத்தையும், பெற்ற தொகையையும் துல்கரிடம் ஒப்படைக்கிறார் ராம்கி. இப்படியே, வங்கி லாக்கருக்கு செல்ல வேண்டிய பணத்தை, ராம்கியை கூட்டாளியாக வைத்து வியாபாரத்தில் இறக்குகிறார் துல்கர்.

ஒருகட்டத்தில் சிபிஐ அவரின் வங்கி கணக்கு குறித்து விசாரிக்கிறது. அதிகாரிகள் தலைசுற்றும் அளவிற்கு, அவருடைய வங்கி கணக்கில் 100 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கிறது. அதனால், அவர் சந்தித்தவை என்ன? அதன் பின் நடந்தது என்ன? அது அவருடைய வாழ்க்கையில் எப்படி மாற்றத்தை ஏற்படுத்தியது? இது தான், லக்கி பாஸ்கர் கதை. பேங்க் மோசடி, ஸ்டாக் மார்கெட் போன்ற காட்சிகள் நம்மை சீட்டின் நுனியில் உட்கார வைத்திருக்கின்றது. துல்கர் சல்மான் திட்டங்கள் அதை செயல்படுத்தும் விதம் அனைத்துமே நம்மை வெகுவளவு கவர்ந்து இருக்கின்றது. எனவே குடும்பத்துடன் சேர்ந்து ஜாலியாக பார்கலாம்.