Malayalam actress Lakshmika Sajeevan passes away பிரபல மலையாள நடிகை 24 வயதில் மாரடைப்பால் மரணம் முழு விபரம்
மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன் மரணம்

Malayalam actress Lakshmika Sajeevan passes away பிரபல மலையாள நடிகை லக்ஷ்மிகா சஜீவன் (24) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார் மலையாள சினிமாவின் இளம் நடிகை லக்ஷ்மிகா சஜீவன் (24) திடீர் மாரடைப்பால் உயிரிழந்துள்ளது திரை பிரபலங்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

இவர் மலையாளத்தில் வெளியாகி உள்ள சவுதி வெள்ளக்கா’, ‘உயாரே’ புழையம்மா, ஒரு யமந்தன் பிரேமகதா’கூன், பஞ்சவர்ணதாதா, ஒரு குட்டநாடன் பிளாக், நித்யஹரித நாயகன், ஒரு யமந்தன் பிரேமகதா உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்
2021-ம் ஆண்டு வெளியான ‘காக்கா’ (Kaakka) படத்தில் பஞ்சமி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டப்பட்டது மலையாளத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் முக்கிய நடிகையாக வலம் வர தொடங்கினார்.
இந்நிலையில், துபாயின் ஷார்ஜாவில் உள்ள வங்கி ஒன்றில் வேலைப் பார்த்துகொண்டிருந்த லக்ஷ்மிகா திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது

அவரது இந்த திடீர் மரணம் மலையாள திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எல்லா இருளையும் தாண்டிய ஒளி நம்பிக்கையைத் தருகிறது’ என்று லக்ஷ்மிகா இறுதியாக துபாயில் இருந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. மலையாள நடிகையின் இந்த திடீர் மரணம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது இன்ஸ்டா பார்க்க:-
https://www.instagram.com/lakshmikasajeevanoffical/?hl=en
Malayalam actress Lakshmika Sajeevan passes away
