CINEMA

Merry Christmas Movie Review Tamil மேரி கிறிஸ்துமஸ்

Merry Christmas Movie Review Tamil  பிரெஞ்சு நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு வந்துள்ள படம் மேரி கிறிஸ்துமஸ். மக்கள் செல்வன் நடிகர் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.

ஆல்பர்ட் எனும் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதியும், மரியா எனும் கதாபாத்திரத்தில் கத்ரினா கைஃபும் நடித்துள்ளனர்.

நடிகர்கள்:- விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் ராதிகா ஆப்தே ராதிகா சரத்குமார், காயத்ரி, சண்முகராஜன் இசை:- ப்ரீத்தம் பின்னனி இசை:- டேனியல் ராஜ் இயக்கம்:- ஸ்ரீராம் ராகவன்

Merry Christmas Movie Review Tamil
Merry Christmas Movie Review Tamil

கதை:-

தனது காதலியைக் கொலை செய்துவிட்டு 7 ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜெயிலிலிருந்து ரிலீசாகி மும்பை வருகிறார் சிவில் இன்ஜினியரான ஆல்பர்ட் ( விஜய்சேதுபதி). மறுநாள் கிறிஸ்மஸ் தினம் என்பதால் அருகில் உள்ள பாரில் இரவு மது விருந்துக்கு செல்கிறார். அதே மும்பை மாநகரில் தனது கணவருடனான குடும்பப் பிரச்னையுடன் தனது வாய் பேசாத மகளுடன் காலத்தைக் கடத்திக் கொண்டிருக்கிறார் மரியா(காத்ரீனா கைஃப்).

அந்த பாரில் மரியாவை சந்திக்கிறார் குடும்பமே இல்லாத ஆல்பர்ட்டும், குடும்ப வாழ்க்கையில் நிம்மதியில்லாத மரியாவிடம் நண்பராக பழகும் விஜய் சேதுபதியை கத்ரீனா தங்கள் வீட்டுக்கு அழைத்து செல்கிறார். இருவரும் பேசிக்கொண்டே, அன்று இரவு ஒன்றாக ஊர் சுற்றுகின்றனர். அங்கு அவரது கணவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார்.

அவரை யார் கொன்றது? விஜய் சேதுபதி யார்? இந்தக் கொலைக்கு யார் காரணம்? ஆல்பர்டும், மரியாவும் அந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன ஆனார்கள்? என்பதே மேரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தின் கதை.

Merry Christmas Movie Review
Merry Christmas Movie Review

Merry Christmas Movie Review Tamil

merry christmas trailer

CLICK HERE

Related Articles

Back to top button