mission chapter 1 review in tamil அருண் விஜய் நடிப்பில் மிஷன் சாப்டர்-1 திரை விமர்சனம்
MISSION CHAPTER 1 Movie Review

mission chapter 1 review in tamil சாப்டர் 1 லைகா நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் Mission : chapter 1
அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.எல்.விஜய். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1 படத்தை இயக்கி உள்ளார் அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகி உள்ளது மிஷன் சாப்டர்-1
கடந்த ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளியான யானை படத்திற்க்கு அடுத்து அருன் விஜய் நடித்துள்ள படம் தான் மிஷன் சாப்டர் 1 அச்சம் என்பது இல்லையே

நடிகர்கள்:- அருண் விஜய் எமி ஜாக்ஸன் நிமிஷா சஜயன், இயல்
இசை:- ஜிவி பிரகாஷ்
இயக்கம்:- விஜய்
கதை:-
சென்னையில் இருக்கும் குணசேகரன் (அருண் விஜய்) தன் மகளின் தலையில் நடத்த வேண்டிய ஆப்ரேஷன் காரணமாக வேலையை விட்டு, ஹவாலா மூலம் பணத்தை எடுத்துக்கொண்டு லண்டன் செல்கிறார்.
அங்கு ஒரு மருத்துவமனையில் அருண் விஜய் வைத்திருக்கும் ஹவாலா பணத்திற்கு ஆசைப்பட்டு ஒருவர் திருட முயற்சிக்கிறார். அப்படி முயற்சிக்கும் போது அடிதடியில் அருண் விஜய் தவறுதலாக போலிஸை அடிக்க, லண்டனில் உள்ள ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்படுகிறார்.
மறுபக்கம் பாகிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவி இந்தியாவில் நடைபெறவுள்ள ஜி20 மாநாட்டினை தடுக்கவேண்டும் என்பது தான். அதற்க்காக லண்டன் சிறையில் உள்ள தங்களின் கூட்டாளிகளை மீட்க லண்டனுக்குச் செல்கின்றனர் தீவிரவாதிகள்

லண்டனில் அருண் விஜய் உள்ள அந்த சிறையில் தான் தீவிரவாதிகள் அடைக்கப்பட்டுள்ளார்கள் அந்த அதிநவீன சிறையின் ஜெயிலராக எமி ஜாக்சன் உள்ளார்.
இந்தியாவில் இருந்து வந்த தீவிர வாதிகள் சிறையில் இருக்கும் தீவிரவாதிகளை மீட்க சிறை முழுவதும் ஹேக் செய்கின்றார்கள் மேலும் உமர் பாய் என்ற தீவிரவாதி சிறையில் கலவரத்தை தூண்டி விடுகிறார்அப்போது ஜெயிலில் இருக்கும் குற்றவாளிகளும் தீவிரவாதிகளும் தப்பிக்க முயற்சி செய்கின்றனர். இதனை தெரிந்துகொண்ட அருண் விஜய் அவர்களை தடுக்க முயற்சி செய்கின்றார்.
இறுதியில் அருண் விஜய் தீவிரவாதிகள் தடுத்தாரா? அவரது குழந்தைக்கு ஆபரேஷன் செய்யப்பட்டதா இல்லையா? அருண் விஜய் யார்? இந்தியாவில் மாநாடு நடந்ததா என்பது தான் கதை
mission chapter 1 review in tamil
mission chapter 1 trailer CLICK HERE
