Nandhan Review சசிகுமாரின் நந்தன் திரை விமர்சனம்
Nandhan Review சசிகுமாரின் நந்தன் திரை விமர்சனம்
நடிகர்கள்:- சசிகுமார், பாலாஜி சக்திவேல், ஸ்ருதி பெரியசாமி இசை: ஜிப்ரான் இயக்கம்: இரா. சரவணன்
Nandhan Review tamil

கதை:-
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள வணங்கான்குடி என்கிற ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராக அப்பகுதியிலிருக்கும் ஆதிக்க சாதியான கோப்புலிங்கம் (பாலாஜி சக்திவேல்) பல வருடங்களாக தலைவராக இருந்து வருகின்றார். அடுத்த பஞ்சாயத்து தலைவராகவும் கோப்புலிங்கமே முன்மொழியப்படுகிறார்.
இந்நிலையில் பொது பஞ்சாயத்து தொகுதியாக உள்ள அந்த கிராமத்தில் தலித்துகள் மட்டுமே போட்டியிடும் தனி (Reserved) பஞ்சாயத்து தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதனால், கோப்புலிங்கமும் அவரது ஆட்களும் அதிர்ச்சியடைகின்றனர் அதன் காரணமாக தனது வீட்டில் வேலை செய்து வரும் ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த அம்பேத்குமாரை (சசிகுமார்) தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க வைக்கிறார். அம்பேத்குமார் தலைவராகத் தேர்தெடுக்கப்பட்டாரா? இந்த சாதிய அடக்குமுறைகள் அம்பேத்குமாரை என்னென்ன செய்கின்றன என்பதே நந்தனின் கதை.