pongal movie release 2024 tamil பொங்கலுக்கு திரைக்கு வரும் திரைப்படங்கள் பட்டியல் இதோ
பொங்கலுக்கு திரைக்கு வரும் திரைப்படங்கள்
pongal movie release 2024 tamil இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் திரைப்படங்கள் பட்டியல் இதோ

கேப்டன் மில்லர் :-
வாத்தி படத்திற்குப் பிறகு, தனுஷ் மீண்டும் தனது ரசிகர்களை கேப்டன் மில்லர் மூலம் சந்திக்க வருகிறார். நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ,இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் ,சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும் நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், சுமேஷ் மூர், சிவராஜ்குமார், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படத்திற்க்கு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஏன் என்றால் அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே இயக்கிய சாணிக்காயிதம்’ ‘ராக்கி’ ஆகிய வெற்றி படங்களை இயக்கியவர் என்பதால் இந்த படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்கள் மத்தியில் அதிகமாக உள்ளது, மேலும் இப்படத்தின் ட்ரைலர் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்து உள்ளது. ஏன் என்றால் இந்த திரைப்படம் ஒரு முழு நீள ஆக்க்ஷன் கதைக்களம் கொண்ட திரைப்படம் என ட்ரைலர் காட்சிகளை பார்க்கும் போதே தெரிகிறது. இதனால் தனுஷின் ரசிகர்களுக்கு இந்த பொங்கல் ஒரு திருவிழாவாக இருக்கும் என கருதபடுகிறது
டிரைலர் பார்க்க:- CLICK HERE
அயலான் :-
மாவீரன் படத்திற்குப் பிறகு, சிவகார்த்திகேயன் மீண்டும் தனது ரசிகர்களை அயலான் மூலம் சந்திக்க வருகிறார். குமார் இயக்கத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வர உள்ள இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இஷா கோபிகர், ஷரத் கேல்கர், பானுப்ரியா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தினை PhantomFX Studios நிறுவனம் மற்றும் கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளார்கள்
மேலும் இந்த படமும் திரையுலகில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை உருவாக்கியுள்ளது ஏன் என்றால் இயக்குனர் இதற்க்கு முன்பு இயக்கிய இன்று நேற்று நாளை திரைப்படத்தின் வெற்றிதான் முக்கிய காரணம் ஆகும் 2016 ஆம் ஆண்டு தொடங்கிய இந்த திரைப்படம் பல தடைகளை தாண்டி பொங்கல் அன்று வெளியாகிறது.
டிரைலர் பார்க்க:- CLICK HERE
மெரி கிறிஸ்துமஸ் :-
விஜய் சேதுபதி, கத்ரினா கைப் நடிப்பில் ஹிந்தி மொழியிலும், தமிழ் மொழியிலும், ஹிந்தி இயக்குனரான ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் மெரி கிறிஸ்துமஸ்(Merry Christmas) திரைப்படமும் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வர உள்ளது.

இந்த படத்தையும் பலர் எதிர்ப்பார்த்துள்ளார்கள் என்றே கூறலாம் ஏன் என்றால் இயக்குனர் ஏற்கனவே அந்தாதுன் (2018) என்ற மிகப்பெரும் வெற்றி படத்தினை இயக்கி உள்ளார். அந்த படத்தின் வெற்றி, அப்படத்தை பல மொழிகளில் மொழிபெயர்க்க வைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. இது பிரெடெரிக் டார்டின் ஃபிரெஞ்சு நாவலான பேர்ட் இன் எ கேஜை அடிப்படையாகக் கொண்டது என்று கூறப்படுகிறது.
டிரைலர் பார்க்க:- CLICK HERE
மிஷன் சாப்டர்-1:-
மிஷன் சாப்டர் 1 லைகா நிறுவனம் தயாரிப்பில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைப்பில் வெளியாகும் திரைப்படம் Mission : chapter 1 திரைப்படம். படம்
ஜனவரி 12ம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீசாக உள்ளது,ஆக்சன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படமும் இந்த பொங்கல் ரேஸில் தைரியமாக களமிறங்குகிறது.

அஜித்தின் ‘கிரீடம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஏ.எல்.விஜய். மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் தழுவி ‘தலைவி’ படத்தை இயக்கியிருந்தார். அதனை தொடர்ந்து ஏ.எல்.விஜய் நடிகர் அருண் விஜய்யுடன் மிஷன் சாப்டர் 1 படத்தை இயக்கி உள்ளார் அருண் விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது மிஷன் சாப்டர்-1
டிரைலர் பார்க்க:- CLICK HERE
ஹனுமான்:-
பொங்கலுக்கு ஹனுமான் திரைப்படமும் வெளியாகின்றது, மேலும் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகிறது இந்த அனுமன் திரைப்படம்.
இயக்குனர் வர்மா மற்றும் தேஜாவின் தெலுங்கு படமான ‘ஸோம்பி ரெட்டி’க்கு பிறகு இரண்டாவது கூட்டணியாகும். பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தில் அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார்.

இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய கதாப்பத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் ஹனுமான் திரைப்படத்தின் ஒவ்வொரு டிக்கெட்களில் இருந்தும் ரூ.5 ராமர் கோயில் அறக்கட்டளைக்கு நிதியாக வழங்க இருப்பதாக ‘ஹனுமான்’ திரைப்படத்தின் படக்குழு தெரிவித்துள்ளது.
டிரைலர் பார்க்க:- CLICK HERE