poonam pandey passed away பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார் முழு விவரம்
poonam pandey passed away பாலிவுட் நடிகை பூனம் பாண்டே காலமானார் முழு விவரம்

நடிகை பூனம் பாண்டே கர்பப்பை புற்றுநோயால இன்று காலை இறந்துவிட்டதாக அவரது மேலாளர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
2011 உலகக் கோப்பையில் இந்தியா வென்றால் நிர்வாணமாக விடியோ வெளியிடுகிறேன் எனக் கூறி பின்னர் கூறியபடி செய்தும் பிரபலமானவர் பூனம் பாண்டே.
மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தவர் சினிமாவில் 2013இல் நாஷா எனும் படத்தில் நடித்துள்ளார்.
அவரது படங்கள் பெரும்பாலும் சர்ச்சைக்குரியதாகவே இருக்கும்.2012இல் கேகேஆர் அணி ஐபிஎல் கோப்பையை வென்றபோது அரை நிர்வாண விடியோ வெளியிட்டு மீண்டும் வைரலாகினார்.
இந்நிலையில் இன்று காலை காலமாகியுள்ளது பூனம் பாண்டேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அவரது மேலாளர் பதிவிட்டுள்ளார்.32 வயதிலே இறந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதில் பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே புற்றுநோயால் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில் “இன்று காலை எங்களுக்கு மிகவும் துயரமான சம்பவம் ஒன்று நடந்தது. கர்ப்பப்பை புற்றுநோயால் எங்கள் அன்புக்குரிய பூனத்தை இழந்துவிட்டோம் என்பதை உங்களுக்கு மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளனர்