pradeep antony bigg boss பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப் ஆண்டனி? ரசிகர்கள் எதிர்பார்ப்பு
pradeep antony bigg boss re entry பிக்பாஸ் நிகழ்ச்சியில் மீண்டும் பிரதீப் ஆண்டனி?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ஆண்டனி மீண்டும் கலந்து கொள்ள அனுமதிக்கபடுவாரா எனும் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே உருவாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கடந்த வாரம் சக போட்டியாளர்கள் மாயா கிருஷ்ணன், பூர்ணிமா, நிக்சன், சரவணன், கூல் சுரேஷ், விஷ்ணு , அக்சயா ஆகியோர் உரிமைக் குரல் எழுப்பி பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என சக போட்டியாளர் பிரதீப் ஆண்டனி மீது குற்றச்சாட்டி ரெட் கார்ட் கொடுத்து வெளியே அனுப்பட்டார்
ஆனால் பிரதீப் ரெட் கார்ட் கொடுத்து அனுப்பபட்ட முடிவு நியாயமற்றது என பிக்பாஸ் வீட்டில் சிலரும், வெளியே பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் பிரதீப் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில்:- நீங்கள் எனக்கு நல்ல விளையாட்டைக் கொடுத்தால் நான் உங்களுக்கு சிறந்த நிகழ்ச்சியை வழங்குவேன். முறையாக நடந்து கொள்வேன் என நான் சத்தியம் செய்கிறேன். ஒரு இடைவெளி முடிச்சிட்டு வர்ற படத்தோட இரண்டாவது பாதி போல பழிவாங்கி ஆடுறேன்” எனக் குறிப்பிட்டு விஜய் டிவி, கமல்ஹாசன் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தை பதிவில் டேக் செய்துள்ளார்
அதற்கு அடுத்த பதிவில், ”ரொம்ப ஷார்ப்-ஆன புள்ளிங்களால தான் அது முடியும். (தயாரிப்பு நிறுவனத்தைக் குறிப்பிட்டு) என்னை மீண்டும் உள்ளே அனுப்புவது குறித்து யோசித்தால், எனக்கு இரண்டு போட்டியாளர்களை வெளியே அனுப்புவதற்கான இரண்டு ரெட் கார்ட்டுகள் வேண்டும். பிக் பாஸ் போட்டியில் நான் கேப்டனாக வேண்டும்” என நிபந்தனைகள் விதித்துள்ளார்.