CINEMA

Raghu Thatha Review கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரை விமர்சனம்

Raghu Thatha Review கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ரகு தாத்தா திரை விமர்சனம்

நடிகர்கள்:- கீர்த்தி சுரேஷ் தேவ தர்ஷினி, எம்.எஸ் பாஸ்கர், ரவீந்திர விஜய்

முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி இந்தியாவை ஆட்சி செய்து வரும் 160 காலத்தில் கதை நடக்கின்றது வள்ளுவன்பேட்டை கிராமத்தில் வங்கியில் பணிபுரிந்து வருகிறார் கதையின் நாயகி கயல்விழி – கீர்த்தி சுரேஷ்.

சிறுவயதில் இருந்தே தமிழ் மொழியின் மேல் பற்று கொண்டவர். அவர் கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஹிந்தித் திணிப்பு பிரச்னை வந்தபோது முதல் ஆளாகக் களத்தில் இறங்கி அதற்கு எதிராக போராடியவர் மேலும் தன் ஊரிலிருந்த இந்தி கற்றுக் கொடுக்கும் சபா இருக்கக் கூடாது என போராடி அதற்கு பூட்டுப் போடும் கயல்விழி அந்த ஹிந்தி சபாவை மூடுகிறார். ஆனால் இந்தி சபாவை திறந்தே தீருவேன் என இந்தி பண்டிதர் – ஆனந்தசாமி அதற்க்கான முயற்சியை எடுக்கின்றார்

மேலும் பெண்களின் உரிமைகளையும், பெண்ணடிமைத் தனங்களைக் கேள்வி கேட்பதற்காக கா.பாண்டியன் என்கிற ஆண் புனை பெயரில் சிறுகதைகளையும் எழுதிவருகிறார். அவருக்கு எஞ்ஜினியர் தமிழ் செல்வன்- ரவிந்திர விஜய் ரசிகராக உள்ளார்.

தனக்குத் திருமணம் வேண்டாம் என்பதில் உறுதியாக இருக்கும் கயல்விழியால் மொத்தக் குடும்பமும் கவலையில் உள்ளது. இதற்கிடையில் தாத்தா எம்.எஸ். பாஸ்கருக்கு கொடிய கேன்சர் நோய் வர அவர் சீக்கிரம் இறந்துவிடுவார் என டாக்டர் சொல்ல, அவருடைய கடைசி ஆசைகளில் ஒன்றாக பேத்தியின் திருமணம் செய்ய சொல்கின்றார் தனது தாத்தாவிற்காக திருமணத்திற்கு சம்மதிக்கிறார். வீட்டில் வரன் பார்க்க தொடங்குகின்றனர். யாரோ ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தனக்கு நன்கு தெரிந்த தமிழ்செல்வனை திருமணம் செய்ய முடிவெடுத்து நிச்சயதார்த்தம் நடந்து முடிகின்றது

Raghu Thatha Review
Raghu Thatha Review

தான் திருமணம் செய்து கொள்ள இருக்கும் தமிழ்செல்வன் பரந்த சிந்தனையும் பெண்களுக்கான சுயமரியாதையையும் மதிப்பவர் என நினைக்கும் கயல்விழிக்கு அவரும் மற்ற ஆண்களைப் போல பிற்போக்கு சிந்தனை கொண்டவராக இருக்கிறார் என்பதை அறிந்து அதிர்ச்சிக்குள்ளாகின்றார்

அதன்பின்பு எப்படியாவது இந்தக் கல்யாணத்தை நிறுத்த வேண்டும் என திட்டமிடுகிறார். கயல்விழி அப்போது தான் பணிபுரியும் வங்கியில் ஹிந்தி தேர்வெழுதி வென்றால், வேறு மாநிலத்திற்கு பணியிடமாற்றமும் சம்பள உயர்வும் கிடைக்கும். அதைக் காரணமாக வைத்து திருமணத்தை நிறுத்தலாம் என முடிவெடுக்கும் கயல்விழி எப்படி இந்தி படித்தார்

இறுதியில் அவருக்கு திருமணம் நடந்ததா இல்லையா? இவர் இந்தி பயில்வது கிராம மக்களுக்கு தெரிந்ததா? இந்தி தேர்வு எழுதினாரா இல்லையா? இந்தி சபாவை இந்தி பண்டிதர் திறந்தாரா இல்லையா/ என்பது தான் மீதிபடம்

Raghu Thatha Review

Click Here 

Related Articles

Back to top button