rakul Preet Singh viral wedding invitation பிப் 21ம் தேதி காதலரை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங்
வைரலாகும் திருமண அழைப்பிதழ்

rakul Preet Singh viral wedding invitation பிப் 21ம் தேதி காதலரை கரம் பிடிக்கும் ரகுல் ப்ரீத் சிங் வைரலாகும் திருமண அழைப்பிதழ்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் தனது காதலர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், இவர்களின் திருமண அழைப்பிதழ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங் தமிழில், ‘தடையறத் தாக்க’, ‘என்னமோ ஏதோ’ போன்ற படங்களில் நடித்தார், இதன் பிறகு இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் இவரது நடிப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. தமிழைக் காட்டிலும் தெலுங்கு திரையுலகில் இவரின் நடிப்பு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது
இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக, பிரபல தயாரிப்பாளரும், நடிகருமான ஜாக்கி பக்னானியை காதலித்து வருவதாகவும் . இந்த ஆண்டில் திருமணம் நடைபெறும் என அறிவித்திருந்த நிலையில் இந்த தகவலை உறுதி செய்யும் வகையில் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் ஜாக்கி பக்னானி திருமணம் பிப்ரவரி 21ம் தேதி நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.