Ranjana Nachiyaar பள்ளி மாணவர்களை தாக்கிய துணை நடிகை ரஞ்சனா கைது! வைரல் வீடியோ
மாணவர்களை தாக்கிய துணை நடிகை கைது
சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசு பேருந்தில் படியில் தொங்கியபடி சென்ற மாணவர்களை அடித்து இறக்கிவிட்டதோடு பஸ் ஓட்டுநர், நடத்துநர்களை அறிவுகெட்ட நாயே என்று ஒருமையில் திட்ட அதனை வீடியோவாக எடுத்து பிரபலமான பாஜக நிர்வாகியும் நடிகையுமான ரஞ்சனா நாச்சியாரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை குன்றத்தூரில் இருந்து போரூர் வரை சென்ற அரசு பேருந்தில் மாணவர்கள் தொங்கியபடி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த நடிகையும் வழக்கறிஞருமான ரஞ்சனா நாச்சியார் அரசு பேருந்தை தடுத்து நிறுத்திடிரைவரிடம் போய் படிக்கட்டில் இப்படி தொங்கிக் கொண்டு வருகிறார்கள். நீங்கள் கேட்கமாட்டீர்களா என்றார். மேலும் அங்க பாருங்க ஒருத்தன் மேலே ஏறுகிறான் என்றான். உடனே பேருந்தின் பின்பக்கம் சென்ற அவர், தொங்கிக் கொண்டிருந்த மாணவர்களை இழுத்து வெளியே தள்ளினார் சில மாணவர்களை அடித்தும் உள்ளார்
இந்த நிலையில் நடிகை ரஞ்சனா மீது மாணவர்களை தாக்கியதாக ஒரு வழக்கும், டிரைவர் , கன்டக்டரை அவதூறாக பேசியதாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இன்று காலை கெரும்கம்பாக்கத்தில் உள்ள ரஞ்சனா நாச்சியார் வீட்டில் மாங்காடு போலீஸார் விசாரணை நடத்தியதை அடுத்து அவரை கைது செய்தனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
பேருந்தில் தொங்கிட்டு போன 4 பசங்களுக்கு புத்தி சொல்லி பேருந்துக்குள் செல்லச் சொல்வதை விட்டுவிட்டு, மொத்த சிறுவர்களையும் வெளியேற்றி நடந்துபோக சொல்லி, அவர்களை திட்டி, தாக்கி, அரசு ஊழியர்களையும் திட்டி அராஜகத்தில் ஈடுபட்ட பெண்… @Anbil_Mahesh@sivasankar1sspic.twitter.com/zO9DVIzSSo
— Devendran Palanisamy (@devpromoth) November 3, 2023