rashmika and vijay devarakonda பிப்ரவரியில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம் இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

rashmika and vijay devarakonda பிப்ரவரியில் விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா நிச்சயதார்த்தம் இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி மாதம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கில் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா இவர் அர்ஜுன் ரெட்டி, கீதா கோவிந்தம், நோட்டா, டியர் காம்ரெட் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார்

அதேபோல் கீதா கோவிந்தம் என்ற படத்தில் இணைந்து நடித்த இருவருக்கும் இடையே நல்ல நட்புறவு ஏற்பட்டது.அதன்பின்பு இருவரும் நடித்த டியர் காம்ரேட் படம் மூலம் இருவரின் இடையிலான நட்பில் தொடர்ந்து நெருக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் காதலித்து வருவதாக கடந்த சில ஆண்டுகளாக தகவல்கள் வெளியானது
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நிறைய நடக்கிறது. ஆனால், இந்த ஒன்று உண்மையிலேயே சிறந்தது. விரைவில் அறிவிக்கிறேன்’ என ஆணும் பெண்ணும் கைகோர்த்திருக்கும் புகைப்படத்தைப் பதிவிட்டிருந்தார் இந்த நிலையில், விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் பிப்ரவரி இரண்டாவது வாரம் நிச்சயதார்த்தம் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எனினும், இதுகுறித்து இருவரும் எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை.ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்.ராஷ்மிகா மந்தனா தற்போது புஷ்பா 2 படத்தில் நடித்து வருகிறார்
rashmika and vijay devarakonda
