Sheela Rajkumar Announced Her Divorce நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கணவரை பிரிவதாக பகிரங்க அறிவிப்பு
Tamil Actresses Sheela Rajkumar திரௌபதி நடிகை விவாகரத்து அறிவிப்பு

Sheela Rajkumar Announced Her Divorce நடுக்கடலில் திருமணம் செய்த திரௌபதி, மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கணவரை பிரிவதாக பகிரங்க அறிவிப்பு
திரௌபதி, மண்டேலா போன்ற படங்களில் நடித்த ஷீலா ராஜ்குமார், தனது கணவரை பிரிந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் அறிவித்து இருக்கிறார். இவர் முதன் முதலாக 2016 ஆம் ஆண்டு இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் வெளிவந்த ஆறாது சினம் என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகிற்கு அறிமுகமானார். மேலும் இவர் ஜீ தமிழ் தொலைகாட்சியில் ஒளிபரப்பான அழகிய தமிழ் மகள் என்ற தொடரில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

அதன்பின்பு திரௌபதி படத்தில் நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து டூ லேட், மண்டேலா ,ஜோதி, நூடுல்ஸ், பிச்சைக்காரன் 2, ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ் போன்ற படங்களில் நடித்து இருக்கிறார். இவர் கடந்த 2021 ம் ஆண்டு தான் காதலித்து வந்த தம்பி சோழர் என்பவரை பெற்றோர் எதிர்ப்பையும் மீறி நடுக்கடலில் திருமணம் செய்துக் கொண்டார்.

இந்நிலையில் தனது கணவரை பிரிந்துவிட்டதாக ஷீலா தனது சமூக வலைதளத்தில் அறிவித்து இருக்கிறார். இதுகுறித்து பதிவிட்டுள்ள அவர் ‘திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன் நன்றியும் அன்பும்’ என்று குறிப்பிட்டு தனது கணவர் சோழனை டேக் செய்து இருக்கிறார்.
Sheela Rajkumar Announced Her Divorce
திருமண உறவிலிருந்து நான் வெளியேறுகிறேன்
நன்றியும் அன்பும் @ChozhanV— Sheela (@sheelaActress) December 2, 2023
