Suriya injured while shooting சண்டை காட்சி படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் நடந்தது என்ன முழு விவரம்
Suriya injured while shooting சண்டை காட்சி படப்பிடிப்பில் நடிகர் சூர்யாவுக்கு தலையில் காயம் நடந்தது என்ன முழு விவரம்
நடிகர் சூர்யா நடித்து வரும் 44வது படத்தின் படப்பிடிப்பின் போது எதிர்பாராத விதத்தில், நடிகர் சூர்யாவுக்கு தலையில் அடிப்பட்டுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன் 44வது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை சூர்யாவின் 2டி மற்றும் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. இப்படத்திற்க்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.இந்தப் படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இந்தப் படத்திற்கு பெயர் இன்னும் அறிவிக்கப்படவில்லை இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்றுவருகின்றது
ஆக்ஷன் காட்சி ஒன்றின் படப்பிடிப்பின் போது, சூர்யாவுக்கு எதிரே இருந்தவர் தவறுதலாக சூர்யாவின் தலையில் தாக்கியதில் இந்த காயம் ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது. உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.ஆனால் பயப்படும்படியாக எதுவும் இல்லை என்றும் சில நாட்களுக்கு சூர்யாவை ஓய்வெடுக்கும்படி மருத்துவர் அறிவுறுத்தி இருப்பதாகவும், தற்போது சூர்யா நலமுடன் இருப்பதாகவும் அவரது தயாரிப்பு நிர்வாகிகள் கூறியுள்ளனர்.