Suriya & Jyotika’s Workout Video சூர்யா ,ஜோதிகா போட்டி போட்டு செய்யும் தீவீர உடற்பயிற்ச்சி வைரல் வீடியோ
Suriya & Jyotika’s Workout Video சூர்யா ,ஜோதிகா போட்டி போட்டு செய்யும் தீவீர உடற்பயிற்ச்சி வைரல் வீடியோ

உடலைப் பராமரிக்கும் நடிகர்களில் உதாரணமாக இருப்பவர் நடிகர் சூர்யா இன்றுவரை தன் உடலைக் கட்டுக்கோப்புடன் பராமரித்து வருகிறார்.
திரைப்படத்தில் ஜோடியாக சேர்ந்து நடித்த நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் காதலித்து 2006-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். திரையுலகில் வெற்றிகரமான ரியல் ஜோடிகளாக வலம்வரும் சூர்யா – ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். சூர்யா- ஜோதிகா மொத்தம் 7 படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.
தற்போது, நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகாவும் உடற்பயிற்சி கூடத்திற்குச் சென்று கடும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.அவர், உடலை வளைத்து தீவிரமாக உடற்பயிற்சிகளை செய்யும் விடியோக்களை அடிக்கடி வெளியிடுவார்.
அந்த வகையில், முதல்முறையாக, அவரும் சூர்யாவும் இணைந்து உடற்பயிற்சி செய்த விடியோவை நடிகை ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்
சூர்யா – ஜோதிகா இருவரும் கடுமையாக உடற்பயிற்சி செய்கிறார்கள். பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் அளவுக்கு ஜோதிகா உடற்பயிற்சி செய்கிறார். ஜோதிகா உடற்பயிற்சி செய்ய சூரியா உதவுகிறார். இந்த விடியோவைப் பார்த்த பலரும் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.
Suriya & Jyotika’s Workout Video
பார்க்க இங்கு கிளிக் செய்யவும்