Teenz Movie Review நடிகர் பார்த்திபனின் டீன்ஸ் திரை விமர்சனம்
Teenz Movie Review நடிகர் பார்த்திபனின் டீன்ஸ் திரை விமர்சனம்
டீன்ஸ் திரைப்படத்தை பார்த்திபன் இயக்க டி. இமான் இசையமைத்துள்ளார்.
நடிகர்கள்:-
பார்த்திபன், யோகி பாபு , சிறுவர் சிறுமியராக தீபேஷ்வரன், பிராங்கிஸ்டன், தீபன், விஷ் ருத்தா ஷிவ், ரிஷி ரத்னவேல், சில்வன்ஸ்டன், அஷ்மிதா, அம்ருதா, உதய்பிரியன், கிரித்திகா, ஜான் போஸ்கோ, ரோஷன், பிரசிதா நசீர் மற்றும் பலர்

கதை:-
பள்ளியில் ஒரே வகுப்பில் படிக்கும் 2கே கிட்ஸ் 13 பேர் வெளிநாட்டில் இந்த வயது குழந்தைகளுக்கு கொடுக்கப்படும் உரிமைகளை தங்களுக்கும் கொடுக்க வேண்டும் என்றும் தாங்கள் அனைவரும் பெரியவர்கள் என்பதை நிரூபிக்க துடிக்கின்றனர்.இந்நிலையில் அவர்களுக்குள் உள்ள சிறுமியின் பாட்டி ஊரில் பேய் இருப்பதாக சொல்ல அதையும் பார்த்துவிடலாம் என முடிவெடுத்த சிறுவர்கள் பள்ளியை ‘கட்’ அடித்துவிட்டு யாருக்கும் தெரியாமல் செல்கின்றார்கள்
இந்நிலையில் அவர்கள் செல்லும் வழியில் போராட்டத்தால் போக்குவரத்து தடை பெறுகிறது.அதை தொடர்ந்து அருகில் உள்ள காட்டுப் பாதைக்குள் சிறுவர்கள் பயணிக்க, செல்லும் இடமெல்லாம் ஒருவர் ஒருவராக தொலைந்து செல்கின்றனர். என்ன என்று புரியாமல் சிறுவர்கள் முழிக்க, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அனைவரும் தப்பி ஓடுகின்றனர்.
அமானுஷ்ய முறையில் காணாமல் செல்ல இவர்களுக்கு உதவ பார்த்திபன் வருகிறார். மாயமான சிறுவர்களின் பின்புலத்தில் இருப்பது அமானுஷ்யமா அல்லது வேறு காரணமா? அவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா? அமானுஷ்யமாக காணாமல் போன சிறுவர்கள் எப்படி மாயமானார்கள்? இதற்கு என்ன காரணம்? எஞ்சியிருந்த மற்றவர்களை காப்பாற்றினார்களா? இதற்கு நடுவில் பார்த்திபனுக்கு என்ன வேலை? என்பதே இப்படத்தின் மீதி கதை.
