TMK தமிழக முன்னேற்றக் கழகம் நடிகர் விஜய் ஆரம்பிக்கும் கட்சியின் பெயர் இது தானா? இணையத்தை கலக்கும் பெயர்
நடிகர் விஜய் ஆரம்பிக்கவிருக்கும் கட்சிக்கு தமிழக முன்னேற்றக் கழகம் என்று பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பிப்ரவரி முதல் வாரத்தில் டெல்லியில் கட்சி பதிவு செய்யப்பட்ட பிறகு கட்சி பெயர், கொடி உள்ளிட்ட முழு விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது
விஜய் மக்கள் இயக்கத்தை கட்சியாகப் பதிவுசெய்ய, வரும் பிப்ரவரி 4ஆம் தேதி டெல்லி செல்ல உள்ளார், விஜய் மக்கள் இயக்கப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் எனத் தெரிகிறது. விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, தனது அரசியல் கனவை வளர்த்து வருகிறார். இந்நிலையில் சென்னையை அடுத்த பனையூரில் விஜய் மக்கள் இயக்க மாவட்ட தலைவர்களுடன் நடிகர் விஜய் ஆலோசனை நடத்தி வந்தார்

விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பாக வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி, மகளிர் அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் அடுத்தடுத்து நடைபெற்றது. இந்நிலையில்நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 150க்கும் மேற்பட்ட நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தொடங்கிய இந்த கூட்டத்தில் நேரடியாக தேர்தலில் போட்டியிடுவது குறித்தும், வேறு கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது குறித்தும் ஆலோசிக்கப்படுவதாக கூறப்பட்டு உள்ளது.
இந்நிலையில் விஜய் தொடங்கவுள்ள அரசியல் கட்சிக்கும் தமிழக முன்னேற்ற கழகம் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளதாக ஒரு தகவல் உலா வருகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜயின் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர்.