TN govt allows special show for The GOAT நடிகர் விஜய்யின் GOAT சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி முழு விவரம் இதோ
TN govt allows special show for The GOAT தி கோட் திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிர்கர் விஜய் நடித்துள்ள திரைப்படம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம். இந்தப்படத்தில் நடிகர்கள் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா , லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள ‘தி கோட்’ படத்தில் விஜய் 2 வேடங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது இந்நிலையில் தி கோட் திரைப்படத்தின் காலை 9 மணி சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. நாளை மட்டும் 5 காட்சிகள் திரையிடவும் தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
TN govt allows special show for The GOAT
More Details Click Here