urmila matondkar divorce reason இந்தியன் பட நடிகை விவாகரத்து அறிவிப்பு திரையுலகம் அதிர்ச்சி
urmila matondkar divorce reason நடிகர் தனுஷ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் நடிகர் ஜெயம் ரவியை தொடர்ந்து இந்தியன் பட நடிகை ஊர்மிளாவும் விவாகரத்து செய்யப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் இந்தியன் படத்தில் நடித்த பாலிவுட் நடிகை ஊர்மிளாவும் அவரது கணவரும் திருமணத்திற்கு முன்பு சில காலம் ஒன்றாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். கடந்த 2016ம் ஆண்டு அவர் காஷ்மீரைச் சேர்ந்த தொழிலதிபரும் மாடலுமான மொஹ்சின் அக்தர் மிரை என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.
இந்து பெண்ணான ஊர்மிளா இஸ்லாமியரை திருமணம் செய்துக் கொண்டது அப்போது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் ஊர்மிளாவை விட அவரது கணவருக்கு 10 வயது குறைவு என்பதும் பேசும் பொருள் ஆகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் கணவரிடமிருந்து விவாகரத்து கோரி ஊர்மிளா மனு தாக்கல் செய்துள்ளார். ஒருமித்த கருத்தின் அடிப்படையில் ஊர்மிளா இந்த விவாகரத்து மனுவை தாக்கல் செய்துள்ளார். இருவரும் ஏன் விவாகரத்து கோரி மனு செய்தனர் என்பது தெரியவில்லை. திருமணமான 8 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் பிரிந்தனர். இருவருக்கும் குழந்தைகள் இல்லை.