Vadakkupatti Ramasamy Trailer காமெடியில் பட்டையை கிளப்பும் நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி ட்ரெய்லர்

Vadakkupatti Ramasamy Trailer காமெடியில் பட்டையை கிளப்பும் நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி ட்ரெய்லர்
சந்தானம் நடித்துள்ள ‘வடக்குப்பட்டி ராமசாமி’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது சமீபத்தில் குலேபகாவலி, ஜாக்பாட் ஆகிய படங்களை இயக்கிய கல்யாணின் 80-ஸ் பில்டப் என்ற படத்தில் சந்தானம் நாயகனாக நடித்து வெளியாகி இருந்தார் அந்த திரைப்படம் ஹிட் அடித்துள்ள நிலையில் அடுத்ததாக நடிகர் சந்தானம் ‘டிக்கிலோனா’ படத்தின் இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் வடக்குப்பட்டி ராமசாமி படத்தில் நடித்துள்ளார்

இந்தப் படத்தை பீபிள் ஃபிலிம் பேக்டரி சார்பில் விஷ்வ பிரசாத் தயாரித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம் பிப்ரவரி 2 ம் தேதி திரைக்கு வர உள்ளது. மேலும் இந்த படத்தில் நடிகர் சந்தானத்திற்க்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார்,
மேலும் ஜான் விஜய், எம்.எஸ்.பாஸ்கர், ரவி மரியா, மாறன், மொட்ட ராஜேந்திரன், நிழல்கள் ரவி, சேஷு, இட் ஈஸ் பிரசாந்த், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகர் சந்தானத்தின் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ட்ரெய்லர் வீடியோ பார்க்க
Vadakkupatti Ramasamy Trailer
