vaniyambadi accident வாணியம்பாடி அருகே அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் பலி
வாணியம்பாடி அருகே அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து
வாணியம்பாடி அருகே அரசு பேருந்து தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து 5 பேர் பலி வாணியம்பாடி அருகே செட்டியப்பனூரில் பெங்களூரிலிருந்து வந்த அரசு பேருந்தும் எதிர்திசையில் வந்த வந்த தனியார் சொகுசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது

விபத்து சம்பவம் அறிந்து உடனடியாக வந்த காவல்துறையினர் மீட்பு பணிகளை மேற்கொண்டனர் இந்த கொடூர விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சென்னையை சேர்ந்த கிருத்திகா (35), வாணியம்பாடி புதூர் பகுதியை சேர்ந்த முகமது பைரோஸ் (45), சையது நசீம் சித்தூரை சேர்ந்த அஜீத் (25), மற்றும் SETC அரசு பேருந்து ஓட்டுநர் ஏழுமலை ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 25 பேர் காயமடைந்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதகட்ட விசாரனையில் பெங்களூருவில் இருந்து வந்த அரசு பேருந்து, கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச்சுவற்றை உடைத்து சென்னையிலிருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பஸ் மீது பயங்கரமாக மோதியதாக தெரிகிறது. விபத்து குறித்து போலிசார் வழக்கு பதிவு விசாரனை மேற்கொண்டு வருகின்றார்கள்