CINEMA
Vettaiyan Teaser நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் டீஸர் பார்க்க
Thalaivar 170 Title நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்துக்கு 'வேட்டையன்' என பெயரிடப்பட்டுள்ளது!!

Vettaiyan Teaser நடிகர் ரஜினிகாந்தின் 170-வது படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது!!

ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளது நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தபடமான தலைவர் 170 படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் எனப் பலரும் நடிக்கின்றனர்.

அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இந்நிலையில் ரஜினியின் பிறந்த நாளையொட்டி தற்போது இப்படத்தின் தலைப்பு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்துக்கு ‘வேட்டையன்’ என பெயரிடப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது