CINEMA

Vidaamuyarchi Review நடிகர் அஜித்தின் விடாமுயற்சி விமர்சனம்

Vidaamuyarchi Review நடிகர் அஜித்தின் விடாமுயற்சி விமர்சனம்

நடிகர்கள்: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன்,ஆரவ் ,ரெஜினா கசாண்ட்ரா மற்றும் பலர் இசை: அனிருத்

இயக்கம்: மகிழ் திருமேனி

Vidaamuyarchi Review
Vidaamuyarchi Review

கதை:-

அர்ஜுன் (அஜித் குமார்), கயல் (த்ரிஷா) பார்த்தவுடனே இருவருக்கும் பிடிக்க, 3 வருடம் காதலித்து திருமணம் செய்கின்றனர். 12 ஆண்டுகளுக்கு வாழ்க்கை அழகாக போக, திரிஷா கர்ப்பம் ஒரு முறை கலைகிறது, அதோடு அவர்களுக்குள் விரிசல் ஏற்படுகின்றது. பெரிதாக சம்பாதிக்கும் அழகான ஆணான அஜித்திடம் சரியான அன்பு கிடைக்கவில்லை என மனைவி த்ரிஷா இன்னொரு வரை காதலிக்கின்றார் அஜித்துக்கு அந்த கள்ள காதல் தெரிய வரும்போது நம்முடைய பிரச்னையைப் பேசித் தீர்க்கலாம் என்று கூறும் கயல். அதற்கான காரணத்தையும், அதற்குப் பின்னாலுள்ள நியாயத்தையும் புரிந்துகொள்கிறார்

விவாகரத்துக்கு அப்ளை செய்த நிலையில், விவாகரத்து வழக்கு முடியும் வரை அம்மா வீட்டுக்குப் போறேன் என்று சொல்ல, சாலை வழியாக காரில் போகலாம். கடைசி ரோடு ட்ரிப் என அழைத்துச் செல்லும் அஜித்தின் கார் பிரேக்டவுன் ஆகின்றது. ஊரோ, செல்போன் சிக்னலோ இல்லாத அந்த பாதையில் அப்போது தன் கன்டெயினர் லாரியில் வரும் ரக்‌ஷித்தும் (அர்ஜுன்), அவரது மனைவி தீபிகாவும் (ரெஜினா கஸண்ட்ரா) கயலை அழைத்துச் சென்று அருகிலுள்ள ஹோட்டலில் விடுவதாகச் சொல்லி அவரை ஏற்றிச்சொல்கிறார்கள்.

ஆனால் அதற்குப் பிறகு காணாமல் போகிறார் கயல். அஜித் அர்ஜுனை தேடி வந்தால் அர்ஜுனோ நீங்கள் யார் என்றே தெரியாது என்கிறார். அஜித் போலிஸாரிடம் போராடியும் எதுவும் கிடைக்காத நேரத்தில், அஜித்தை ஆரவ் கேங் அடித்து அர்ஜுனிடம் அழைத்து செல்கின்றார் திரிஷா கடத்த பின்னணியில் இருப்பது யார்? தனது மனைவியை அஜித் கண்டு பிடித்தாரா? இல்லையா? என்பது தான் இந்த படத்தின் கதை.

Vidaamuyarchi Review

CLICK HERE

Related Articles

Back to top button