CINEMA

wayanad landslide helping actors வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திரையுலகை சேர்ந்த யார் யார் எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றனர் முமு விவரம்

wayanad landslide helping actors வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திரையுலகை சேர்ந்த யார் யார் எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றனர் முமு விவரம்

wayanad landslide helping actors
wayanad landslide helping actors

வயநாட்டில் கடந்த 30ஆம் தேதி மண் சரிவு ஏற்பட்டு, தற்போது வரை 387 பேர் வரை உயிரிழந்திருக்கின்றனர். இன்னும் மீட்புபணிகள் தொடர்ந்து நடைபெரற்று வருகின்றது. கேரளா இதுவரை சந்தித்திராத பேரழிவாக இது மாறியிருக்கிறது. இப்படி இருக்கையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி அளிக்க விரும்புவோருக்காக கேரள அரசு வங்கிக்கணக்கை அறிவித்திருக்கிறது. இதன் மூலம் கேரள முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதி கணக்குக்கு நேரடியாக நன்கொடை கொடுக்க முடியும்.

மேலும் உலகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும், சினிமா பிரபலங்களும் வயநாட்டுக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் திரையுலகை சேர்ந்த பலர் நிவாரண நிதியை கொடுத்திருக்கின்றனர். அவர்களில் யார் யார் எவ்வளவு நிதி கொடுத்திருக்கின்றனர் என்பதை இங்கு பார்ப்போம். விக்ரம்: தமிழ் திரையுலகின் முக்கிய நடிகராக வலம் வருபவர்

விக்ரம்:-

 கேரள மண் சரிவு பேரிடருக்கு 20 லட்ச ரூபாயை நன்கொடையாக கொடுத்திருக்கிறார்.

சூர்யா-ஜோதிகா:-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  சூர்யா ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி மூவரும் சேர்ந்து ரூ.50 லட்சத்தை நன்கொடையாக அளித்திருக்கன்றனர்.

நயன்தாரா-விக்னேஷ் சிவன்:

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர், நயன்தாரா. கேரளாவில் இருந்து தமிழ் படங்களில் நடிக்க வந்த இவர், தற்போது கோலிவுட்டின் டாப் நடிகையாக விளங்குகிறார். இவரும், விக்னேஷ் சிவனும் இணைந்து மண் சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் கேரள அரசுக்கு ரூ.20 லட்சத்தை நன்கொடையாக அளித்திருக்கின்றனர்.

பகத் ஃபாசில்:-

ஃபகத் ஃபாசில். இவரும் இவரது நண்பர்களும் இணைந்து சுமார் 25 லட்சத்தை கேரள அரசுக்கு நன்கொடையாக வழங்கியிருக்கின்றனர்.

நடிகர் பிரபாஸ்:-

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக, நடிகர் பிரபாஸ் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.2கோடியை அவர் நன்கொடையாக வழங்கியிருக்கிறார்.

சிரஞ்சீவி மற்றும் ராம்சரண்:-

கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் சிரஞ்சீவி மற்றும் அவரது மகனும், நடிகருமான ராம்சரண் இணைந்து ஒரு கோடி ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளனர்.

அல்லு அர்ஜுன்:-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ₹25 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்

ஜெயராம்:-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்குநடிகர் ஜெயராம் ரூ.5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார் ராஷ்மிகா மந்தனா வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை ராஷ்மிகா மந்தனா ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார்.

மோகன்லால் :-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மோகன்லால் ரூ.25 லட்சம், வழங்கியுள்ளார்.

மம்மூட்டி & துல்கர் சல்மான்:-

மம்மூட்டி ரூ.20 லட்சம், துல்கர் சல்மான் ரூ.15 லட்சம் என நிவாரண நிதி வழங்கியுள்ளனர்.

மோகன்லால்:-

விஸ்வ சாந்தி தொண்டு நிறுவனம் சார்பில் ரூ.3 கோடி நன்கொடையாக வழங்கப்படும் என நடிகர் மோகன்லால் அறிவித்து உள்ளார். இதுதவிர, சூரல்மலா பகுதியில் உள்ள வெள்ளரிமலா பள்ளிக்கூட புனரமைப்பு பணிகளுக்கு உதவுவேன் என்றும் கூறியுள்ளார்.

கமலஹாசன்:-

நடிகரும் அரசியல் கட்சி தலைவருமான கமல்ஹாசனும் 25 லட்சம் ரூபாய் நிதியை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

நவ்யா நாயர்:-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ நடிகை நவ்யா நாயர் 1 லட்சம் நிதியை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

மஞ்சு வாரியர்:-

வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நடிகை மஞ்சு வாரியர் 5 லட்சம் நிதியை கேரள முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அனுப்பியுள்ளார்.

இதுபோல் பலரும் தொடர்ந்து பல நடிக நடிகைகளும் ,தொழிலதிபர்களும், அரசியல் கட்சி தலைவர்களும் , பொதுமக்களும் தங்களால் ஆன நிவாரண உதவியையும் நிதியையும் அளித்து வருகின்றார்கள் வயநாடு மண்சரிவு பேரழிவில் நிமிடத்திற்கு நிமிடம் தோண்ட தோண்ட பலி எண்ணிக்கை அதிகரிப்பதும், காணாமல் போயிருப்பவர்களின் எண்ணிக்கை பலியானவர்களின் பெயர் பட்டயலில் சேர்வதும் காண்போரை பதைபதைக்க வைக்கிறது.

wayanad landslide helping actors

மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1818566507296960518

Related Articles

Back to top button