yuvan shankar raja இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் புகார் முழு விவரம்
yuvan shankar raja இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் புகார் முழு விவரம்

இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது போலீசில் புகார் முழு விவரம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மீது சென்னை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல பின்னணி பாடகர், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கம் லேக் ஏரியாவில் இருக்கும் அஜ்மத் பேகத்தின் வீட்டில் ஸ்டுடியோ வைத்து நடத்தியிருந்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. 2018ம் ஆண்டில் இருந்து அந்த இடத்தில் ஸ்டுடியோ வைத்திருக்கிறார். இந்நிலையில் 3 ஆண்டுகளாக அவர் வாடகை கொடுக்கவில்லை என அஜ்மத் பேகத்தின் சகோதரர் முகமது ஜாவித் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.வாடகையும் தரவில்லை, வீட்டை காலி செய்ததையும் சொல்லவில்லை.
அக்கம்பக்கத்தினர் சொல்லித் தான் எங்கள் வீட்டை யுவன் சங்கர் ராஜா காலி செய்ததே தெரியும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாடகைப் பணம் ரூ.20 லட்சத்தை செலுத்தாமல் ஸ்டூடியோவையும் காலி செய்வதாக உரிமையாளர் ஹஜ்மத் பேகம் புகார் அளித்துள்ளார். மேலும் 2018 முதல் வைத்திருந்த ஸ்டூடியோவிற்கு 3 ஆண்டுகளாக வாடகை தரவில்லை என உரிமையாளர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.