Benefits of peerkangai பீர்க்கங்காய் வெள்ளரி குடும்பத்தைச் சேர்ந்தது, இதை Ridge gourd என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள், இதில் வைட்டமின் A, B, C மற்றும் தாது உப்புகள் அதிகம் உள்ளது.மேலும் இதில் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து உள்ளது எனவே இதன் சத்துக்கள் இரத்தத்தால் எளிதில் உறிஞ்சப்படுகிறது.
பீர்க்கங்காயின் நன்மைகள்
நம் உணவில் பீர்க்கங்காயை கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ சமைத்து சாப்பிட்டு வந்தால் சளி,பித்தம்,வாத நோய், மற்றும் முதுகு வலி குணமாகும். பீர்க்கங்காயை சூப்பாகவும் குடிக்கலாம்.அதன் தொலை கூட வீணாக்கமல் துவயைல் அரைக்கலாம்.
Benefits of peerkangai
எடை இழப்பு
கலோரிகள் குறைவாகவும் நார்ச்சத்து அதிகமாகவும் உள்ள இந்த பீர்க்கங்காய் செரிமான பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த தீர்வு மேலும் கொழுப்பை உறிஞ்சி எடை இழப்புக்கு உதவுகிறது. மேலும் இந்த காய்கறி சாப்பிட சுவையாகவும் நிறைவாக இருக்கும்
சர்க்கரை நோய்
பீர்க்கங்காய் இரத்ததில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிரது மேலும் இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் உற்பத்தியை சீராக்கி உடலில் சர்க்கரையை சரியாக சுரக்கவும், உறிஞ்சவும் உதவுகிறது.அதிக எடை கொண்டவர்களுக்கும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இந்த பீர்க்கங்காய் ஒரு வரப்பிரசாதம் எனறே கூறலாம் .
நோய் எதிர்ப்பு சக்தி
பீர்க்கங்காயில் உள்ள தாதுக்கள், வைட்டமின் C, இரும்பு, மெக்னீசியம், தியாமின், ரைபோஃப்ளேவின் மற்றும் துத்தநாகம் போன்றவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. கண் தொற்று, கல்லீரல் தொற்று மற்றும் வயிற்று தொற்று போன்றவை வராமல் தடுக்கின்றது மேலும் இது அழற்சியை குறைக்கின்றது.
சரும பராமறிப்பு
பொதுவாக குடல் ஆரோக்கியத்துடன் இருந்தல் சருமமும் பொலிவாக இருக்கும். தோல் பிரச்சினைகள் , குடல் ஆரோக்கியத்துடன் தொடர்புடையவை.எனவே அடிக்கடி பீர்கங்காவை உணவில் சேர்ப்பது சருமத்தை பளபளப்பாக்கும். இந்த வித்தியாசத்தை சில வாரங்களில் காண்பீர்கள்.
Benefits of peerkangai
கண் பார்வை
பீர்க்கங்காயில் பீட்டா கரோட்டீன் உயிர்ச்சத்து அதிக அளவில் இருப்பதால் அது கண் பார்வையைத் தெளிவாக்கத் தெரிய உதவுகிறது பீர்க்கங்காய் சாறு தினமும் 50 மில்லி வீதம் காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 2வாரம் குடித்து வந்தால் மங்கலான பார்வை தெளிவாகும். மஞ்சள் காமாலையை விறட்ட பீர்க்கங்காய் சாறு 5ம்ல் எடுத்து 1/2 ஸ்பூன் சர்க்கரை கலந்து காலை மாலை என இரண்டு வேளை குடித்து வர மஞ்சள் காமாலை விரைவாக குணமாகும்.
வயிற்றுப் புழுக்கலை ஒழிக்க
பீர்க்கங்காய் நறுக்கி அதனுடன் 250ml தண்ணீர் ஊற்றி சிறிது உப்பு சேர்த்து தண்ணீரை நன்கு கொதிக்கவைத்து காலை மாலை இருவேளையும் கொதிக்க வைத்த நீரை அருந்தி வர வயிற்றில் உள்ள புழுக்கள் ஒழியும். Antilergy-ஒவ்வாமை எதிர்ப்பு பீர்க்கங்காய் நம்மை அலர்ஜியில் (ஒவ்வாமையில்) இருந்து பாதுகாக்கிறதுஇதை தொடர்ந்து உட்கொண்டுவந்தால் அரிப்பு போன்ற ஒவ்வாமைகளிலிருந்து விடுபட உதவும்
இரத்த சோகையை சீராக்க
பொதுவாக இரும்புச்சத்து குறைபாட்டால் இரத்த சோகையால் பாதிக்கப்படுகின்றனர். இதனால் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுத்துகிறது முக்கியமாக பெண்களுக்கு. உடலில் இரத்த சிவப்பணுக்களை உற்பத்தியை பராமரிக்க இரும்பு சத்து மிகவும் முக்கியமானது. இது நம் உடல் உறுப்புகள் சரியாக இயங்க உதவுகிறது. இரத்த சிவப்பணுக்களின் தொகுப்புக்கு வைட்டமின் B6 முக்கியமானது. பீர்க்கங்காயில் இந்த வைட்டமின் B6 நிறைந்துள்ளது.
More Details Click here