fitnesshealthTamilNadu News

Dhinam oru kaikari கோவக்காயின் நன்மைகள் என்ன என்ன முழு விவரம்

Scarlet gourds தினம் ஒரு காய்கறி கோவக்காய்

Dhinam oru kaikari தினம் ஒரு காய்கறி கோவக்காயின் நன்மைகள் என்ன என்ன முழு விவரம்

Dhinam oru kaikari
Dhinam oru kaikari

கோவைக்காயை தினமும் நாம்   உண்டுவர  சரும நொய்களான சொரியாசிஸ், படை, சிரங்கு, தேமல் போன்ற சரும நொய்களை குணமாக்கும்

பல நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு தேவையான மருந்து கோவப்பழங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. காய்ச்சல், மஞ்சள் காமாலை போன்ற நோய்களுக்கு இதிலிருந்து மருந்து தயாரிக்கப்படுகிறது. கோவக்காயில் உள்ள பீடா கரோடின் என்னும் சத்தானது இதயம் தொடர்பான நோய்களை தடுக்கிறது. கோவக்காஇல் இரும்புச்சத்து, கால்சியம், விட்டமின் பி1 மற்றும் பி2, நார்ச்சத்து போன்றவை உள்ளன.

ஆயுர்வேதத்தில் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துவதற்கு கோவக்காயை பயன்படுத்துகின்றனர். இந்தக் கொடியின் தண்டுகள் மற்றும் இலைகளை பறித்து சூப் வைத்து அருந்தலாம். கோவக்காய் இலைகளை பச்சையாக சாப்பிட்டால் குளுக்கோஸ் சகிப்புணர்வு அதிகரிக்குமாம். வாரம் ஓரிரு நாட்கள் இதை உங்கள் உணவில் சேர்த்து வர சர்க்கரை கட்டுக்குள் வரும்.

கோவை இலைக்கும், கோவைக்காய்க்கும் மருத்துவ குணங்கள் அதிகம் உண்டு. இவை பல்வேறு நோய்களுக்கான சித்த மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. கோவை இலைக்கும்,

கோவக்காய் இலைகள் மற்றும் தண்டுகளை பேஸ்ட் போல அரைத்து சருமத்தில் தடவினால் அலர்ஜிகள் குணமாகும். கோவக்காயில் உள்ள ஆண்டிஆக்சிடண்ட் சத்துக்கள் மற்றும் பீடா கரோடின் ஆகியவை புற்றுநோய் உண்டாகுவதை தடுக்கும். கோவக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதய செயல்பாடுகளை ஊக்குவிக்கும்.

கோவை இலையை நிழலில் உலர்த்தி பொடி செய்து, தேன் கலந்து ஒரு மண்டலம் உண்டு வந்தால் இழந்த தாதுவை மீண்டும் பெறலாம். கோவை இலை சாறுடன் வெண்ணெய் சேர்த்து பூசி வந்தால் சொறி, சிரங்கு, நாள்பட்ட புண் போன்றவை குணமாகும். கோவைக்காய் மலிவான விலையில் கிடைக்கும். கோவைக்காய் வாங்கி சமைத்து உண்டால் அனைத்து நோய்களையும்  குணப்படுத்தி விடலாம். 

கோவை மூலிகையானது சிறுநீர், வியர்வை ஆகியவற்றை மிகுதிப்படுத்தும் குணமுடையது. மேலும் ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த வல்லது. கோவைக் கிழங்கு சாறு 10 மி.லி. அளவில் காலையில் மட்டும் குடித்து வந்தால் இரைப்பு இருமல், கபரோகம், மார்புச்சளி, மதுமேகம், கண்டமாலை, வீக்கம் ஆகியவை தீரும். 

கோவக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. அல்சர் உள்ளவர்களுக்கு இது நல்ல பலனை கொடுக்கும். கால்சியம் மற்றும் இதர மினரல்களால் உருவாகும் சிறுநீரக கற்கள் சிறுநீரக பாதையில் தங்கிவிடும். கோவக்காயில் உள்ள ஆரோக்கியமான கால்சியம் சத்து இந்த சிறுநீரக கற்களை தடுக்கக் கூடியது. 

Dhinam oru kaikari

More Details Click Here

 

Related Articles

Back to top button