ridge gourd பீர்க்கங்காய் உணவில் சேர்ப்பதால் ஏற்படும் 6 ஆரோக்ய நன்மைகள் என்ன
பீர்க்கங்காய் சாப்பிடுவதால் கண் பார்வை சரியாகும்
ridge gourd பீர்க்கங்காயின் ஆங்கில பெயர் ridge gourd ஆகும் பீர்க்கு பேரினம் எனப்படும் இது ஒரு படர்கொடி தாவரம் இது கூட்டு, பொறியல் என பல வகையாக சமைக்கக் பயன்படும் ஒரு வகை தாவரப்பேரினம் ஆகும். நார்ச்சத்து நிறைந்த இந்த பீர்க்கங்காய் மிகக் குறைந்த கலோரி அளவைக் கொண்டதாகும். நம் உடல் ஆரோக்கியத்துக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள் அனைத்தும் இந்த பீர்க்கங்காயில் உள்ளது . மேலும் பல நோய்களைத் தீர்க்கவும் ,கட்டுப்படுத்தவும் இந்த பீர்க்கங்காய் உதவுகிறது
பீர்க்கங்காய் சிறந்த கோடைகால காய்கறியாகும். பீர்க்கங்காய் சுரைக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் சி, இரும்பு, மெக்னீசியம், வைட்டமின் பி 6, பொட்டாசியம், சோடியம், துத்தநாகம், தாமிரம் மற்றும் செலினியம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த உணவாகும். பீர்க்கங்காய், அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து நிறைந்த காய் ஆகும். இது மலச்சிக்கல் பிரச்னைகளை எளிதாக்கும்.
பீர்க்கங்காயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் நிறைந்துள்ளன. இந்த சத்துக்கள் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. செரிமானத்தை மேம்படுத்துவது முதல் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை டயட்டில் பீர்க்கங்காயை சேர்ப்பதால் கிடைக்கும்
கண் பார்வைக்கு உகந்தது
பீட்டா கரோட்டீன் உயிர்ச்சத்து அதிகம் இருக்கும் இந்த பீர்க்கங்காய் தெளிவான பார்வைக்கு உதவுகிறது. மேலும் தினமும் பீர்க்கங்காய் சாறு 50 ம்ல் வீதம் காலையில் வெறும் வயிற்றில் 2 வாரம் தொடர்ந்து குடித்து வர மங்கலான கண் பார்வை தெளிவாகும்.
பீர்க்கங்காயில் குளுக்கோஸ் அளவு குறைந்து காணப்படுவதால் இது ரத்ததில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்கிறது
பீர்க்கங்காய் உங்கள் ரத்த சர்க்கரை அளவை சமநிலைப்படுத்த உதவும். பீர்க்கங்காய், உடலில் இருக்கும் நச்சுக் கழிவுகள், ஆல்கஹால் எச்சங்களை அகற்ற உதவும். உடலில் கொழுப்பு குவிவதைத் தடுக்கவும் உதவும் என்பதால் கல்லீரல் செயல்பாட்டிற்கும் இது அற்புதமானதாகக் கருதப்படுகிறது.
பீர்க்கங்காய் இரும்பு மற்றும் மாங்கனீசு ஆகியவற்றின் மூலமாகும். இதில் அழற்சி எதிர்ப்புப்பண்பு மற்றும் பீட்டா கரோட்டின் அதிகம் உள்ளது. இது கண் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு அருமருந்து இந்த பீர்க்கங்காய்.. இதில் நார்ச்சத்துக்கள் அதிகளவு காணப்படுகிறது. கொழுப்பை சரியாக ஜீரணித்து உறிஞ்சும் உணவு இழைகளால் நிரம்பியுள்ளது.
பீர்க்கங்காயில் உள்ள நீர்ச்சத்து உங்களுக்கு எடை இழப்பை தருவதில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. அத்துடன் அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது.. பீர்க்கங்காய் சேர்த்த உணவுகளை உண்ணும்போது நீண்டநேரத்துக்கு பசி எடுப்பதில்லை.
பீர்க்கங்காயில் வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ளது, இவை ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தலுக்கு அவசியமானவை. இது ஆன்டிஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது, இது முன்கூட்டிய வயதான மற்றும் பிற தோல் மற்றும் முடி பிரச்சினைகளை ஏற்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களின் சேதத்தைத் தடுக்க உதவுகிறது
ridge gourd
More Details Click Here