10cm long fish in kids throat 11மாத குழந்தையின் தொண்டைக்குள் விழுந்த 2 மீன்கள்
குழந்தையின் தொண்டையில் அறுவை சிகிச்சை செய்து மீன்கள் அகற்றம்

10cm long fish in kids throat 11மாத குழந்தையின் தொண்டைக்குள் விழுந்த 2 மீன்கள் -கர்நாடகா மாநிலம் கஞ்சேனஹள்ளியில் பகுதியை செர்ந்த தம்பதி யோகேஷ் – ரோஜா .இவர்களின் 11 மாத குழந்தை அழுது கொண்டே இருந்ததால், குழந்தையின் பாட்டி தொட்டியில் உள்ள மீன்களை கையில் பிடித்து விளையாட்டு காட்டியுள்ளார்.
திடீரென பாட்டியின் கையை குழந்தை தட்டிவிட்டதால், பாட்டியின் கையில் இருந்த மீன்கள் குழந்தையின் வாயில் விழுந்து தொண்டைக்குள் சிக்கிக்கொண்டது. இதனால் குழந்தை மூச்சுவிட முடியாமல் திணறியதை கண்ட பெற்றோர் அலறித் அடித்துக்கொண்டு உடனடியாக குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு எடுத்து சென்று அனுமதித்த போது, தொண்டையில் 10 cm நீளமுள்ள இரண்டு மீன்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து குழந்தைக்கு அறுவை சிகிச்சை செய்து தொண்டைக்குள் சிக்கிய மீன்கள் அகற்றப்பட்டன. சிகிச்சைக்கு பிறகு தற்போது குழந்தை நலமுடன் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது