arali flower banned in kerala அரளிப்பூவால் நேர்ந்த மரணம் 2500 கோவில்களில் அரளிப்பூவிற்கு தடை
கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் ஹதிப்பாடு பகுதியைச் சேர்ந்த சூர்யா (24) B,Sc நர்சிங் பட்டதாரியான இவருக்கு , லண்டனில் செவிலியராக வேலை கிடைத்த நிலையில் .
விமான நிலையத்திற்கு செல்லும் முன் உறவினர்களிடம் செல்போனில் பேசியபடி வீட்டு முற்றத்தில் இருந்த அரளி செடியின் பூவை தவறுதலாக வாயில் போட்டுமென்று பின்னர் அதை துப்பியுள்ளார் பின் விமான நிலையத்திற்கு செல்லும் போது அடிக்கடி வாந்தி எடுத்தபடி சென்ற சூர்யா,
விமான நிலையத்தில் ஆவணங்களைச் சரிப்பார்க்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அவரை அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அடுத்த நாள் உடல் நிலை மோசம் அடைந்த நிலையில், சிகிச்சை பலனின்றி செவிலியர் சூர்யா உயிரிழந்தார்.
அவரது மரணத்தை தொடர்ந்து தீவிர விசாரணை நடத்திய காவல்துறையினர் அரளி பூக்களை சாப்பிட்டதே அவரது மரணத்துக்குக் காரணம் என முதல்கட்ட விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளது.
மருத்துவர்கள், இதயம் நின்று போனதே செவிலியர் சூர்யா மரணத்துக்குக் காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் அரளியின் பூ, இலை, காய், வேர் ஆகியவை விஷம் தன்மை நிறைந்தவை என்றும் இதில் இதயத்தை செயல் இழக்கச் செய்யும் தன்மை இருக்கிறது என்றும் கூறியுள்ளனர்
மேலும் செவிலியர் சூர்யாவின் உடல் ஃபாரன்சிக் பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும், அந்த சோதனை முடிவுகள் வந்த பிறகுதான் செவிலியர் சூர்யாவின் மரணத்துக்கு அரளிப்பூ காரணமா என உறுதியாகத் தெரிய வரும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து கேரலாவில் உள்ள திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு உட்பட்ட அனைத்து கோயில்களிலும் அரளிப் பூக்கள் தவிர்க்கப்படும் என்றும் கோவில் பூஜைகளில் அரளிப்பூக்களைப் பயன்படுத்தினாலும் அதை பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்பட மாட்டாது என்றும் அதே போல் மலபார் தேவசம்போர்டுக்கு உட்பட்ட கோவில்களிலும் பாதுகாப்பு கறுதி அரளிப்பூ தடை செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
arali flower banned in kerala