healthfitness

Benefits of guava கொய்யாப் பழத்தின் 15 நன்மைகள் நீங்கள் தெரிந்து கொள்ள

Health Benefits of Guava தினமும் கொய்யா பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்

Benefits of guava கொய்யாப் பழத்தின் நன்மைகள் பொதுவாகவே பழங்கள் சத்துக்கள் நிறைந்தவை மற்றும் நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவக்கூடியவை என்றே சொல்லலாம்

அந்த வகையில் பொட்டாசியம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து அதிகம் கொண்டது, வைட்டமின் சி, ஏ, இ ,பி9 போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்கள் நிறைந்த பழங்களில் கொய்யாப்பழம் ஒன்றாகும். இதனை பழங்களின் ராணி என்றே சொல்லலாம்

guava fruit in tamil பொதுவாக கொய்யாப் பழம் சிகப்பு கொய்யா மற்றும் வெள்ளை கொய்யா என இருவகையில் கிடைக்கின்றது மேலும் கொய்யா மரத்தின் வேர், இலைகள், பட்டை போன்ற அனைத்திலும் மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன என்றே கூறலாம்

அதேபோல் மார்க்கெட்டில் பெரிய சைசில் இருக்கும் கொய்யா பழங்கும் ஹைபிரீட் பழங்கள் ஆகும். அதனால் சிறிய வடிவில் அல்லது மீடியமாக உள்ள கொய்யாவை மட்டுமே வாங்கவேண்டும்

guava11

நோய் எதிர்ப்புத் திறனை அதிகப் படுத்த வேண்டும் என்றால் நாம் தினசரி ஓர் கொய்யா சாப்பிடலாம் கொய்யாப் பழத்தில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது என்பது முற்றிலும் உண்மை.

கொய்யா பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது.

கொய்யா பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூலத்திற்கு நல்லது. மலச்சிக்கல்தான் மூலத்திற்கு மிகப் பெரிய காரணம். கொய்யா சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். மூலமும் சரியாகும்.

வெள்ளை கொய்யாவை விட சிகப்பு கொய்யாவில் அதிக தண்ணீர் மற்றும் குறைவான சர்க்கரை இருப்பதாக நம்பப்படுகிறது.

மேலும் வெள்ளை கொய்யாவை விட சிவப்பு கொய்யாவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களின் அளவும் அதிகமாக உள்ளது.

கொய்யா பழத்தில் விட்டமின் பி இருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்க உதவும்

Benefits of guava

நார்ச்சத்தின் மூலமாகவும் மற்றும் குறைந்த கிளைச்மிக் (Glycemic Index) குறியீடு காரணமாகவும் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான காரணிகளைத் தடுக்கின்றனமேலும் அதிக அளவில் நார்ச்சத்தினை உள்ளடக்கி உள்ளதால் சர்க்கரையின் அளவு நன்கு ஒழுங்கு படுத்தப்படுகிறது. அதேபோல் ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகின்றது இந்த கொய்யாப்பழம் எனவே நீரிழிவு நோயினால் பதிக்கப்பட்டவர்களுக்குக் கொய்யாப் பழம் சிறந்தது என்றே கூறலாம்

கொய்யா இலை

கொய்யாவில் எந்த எந்த சத்துக்கள் உள்ள்தோ அதேபோல் அதன் இலைகளிலும் அதன் சத்துக்கள் அனைத்தும் உள்ளது

நாம் தினமும் கொய்யா இலை நீரை குடிப்பதாலும் அதன் முழு பயன்களும் நமக்கு கிடைக்கும் கொய்யா இலையில் புரதம், விட்டமின்கள் B6, கோலைன், விட்டமின் C, கால்சியம், இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், ஆன்டி-ஆக்ஸிடன்டுகள் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி போன்ற அனைத்து சத்துக்களையும் கொண்டுள்ளது

guavaleaf

4-5 கொய்யா இலைகளை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். இதை இரண்டு கிளாஸ் தண்ணீருடன் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். தண்ணீர் பாதியாக வற்றும் வரை கொதிக்க வைத்து ஆறவிடவும். இதை வடிகட்டி பருகலாம்.

Benefits of guava

For more information Click Here

https://en.wikipedia.org/wiki/Guava#:~:text=Guavas%20are%20rich%20in%20dietary,for%20vitamin%20C%20(table).

Related Articles

Back to top button