bihar doctor removed metal objects from youths stomach இளைஞரின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 2 நகவெட்டி, சாவி, போன்ற பல பொருட்கள் முழு விவரம்

இளைஞரின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்ட 2 நகவெட்டி, சாவி, போன்ற பல பொருட்கள் முழு விவரம்
பீகார் மாநிலம் சம்பராண் மாவட்டத்தில் செர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென ஏற்பட்ட வயிற்று வலியின் காரணமாக மோதிஹாரியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த இளைஞரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது வயிற்று பகுதியை எக்ஸ்ரே எடுத்து பார்த்தப்போது அவரது வயிற்றில் பல உலோகப் பொருட்கள் இருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்கள்.

இது பற்றி இளைஞரின் பெற்றோரிடம் மருத்துவர்கள் விசாரித்த போது, கடந்த சில நாட்களாக அந்த இளைஞர் உலோகப்பொருட்களை விழுங்கி வருவதாக கூறியுள்ளானர்.
பிறகு அந்த இளைஞருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டு டாக்டர் அமித் குமார் வழிநடத்திய நிலையில் முதலில் ஒரு மோதிரத்தை மருத்துவ குழு இளைஞரின் வயிற்றில் இருந்து அகற்றியது. பிறகு 2 சாவிகள், 4 அங்குல கத்தி மற்றும் 2 நகவெட்டிகள், அடுத்தடுத்து உலோகப் பொருட்கள் அகற்றப்பட்டது.
அறுவை சிகிச்சைக்கு பிறகு உடல்நிலை மேம்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர் மேலும் இளைஞர் விரைவில் குணமடைவார் என்றும் தெரிவித்தனர். இளைஞரின் மனநல பாதிப்புதான் அசாதாரண நடத்தைக்கு வழி வகுத்ததால் இவ்வாறு நடந்துள்ளது என்றும் மருத்துவர்கள் கூறினார்கள்.
bihar doctor removed metal objects from youths stomach
for more viral videos