boy chokes to death eating 3 pooris ஒரே நேரத்தில் 3 பூரியை சாப்பிட்ட 11 வயது சிறுவன் மூச்சு திணறி பலி

ஒரே நேரத்தில் 3 பூரியை சாப்பிட்ட 11 வயது சிறுவன் மூச்சு திணறி பலி
தெலங்கானாவில் செகந்திராபாத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 6ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் வீரென் ஜெயின்., மதிய உணவுக்காக வீட்டில் செய்த பூரிகளை சிறுவன் கொண்டு வந்துள்ளான்.

அப்போது ஒரே நேரத்தில் மூன்று பூரிகளை சாப்பிட முயன்றப்போது எதிர்பாராதவிதமாக சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. பூரி மூச்சுக் குழாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது .உடனே சக மாணவர்கள் ஆசிரியரிடம் தெரிவித்தனர்
ஆசிரியர்கள் மாணவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது சிறுவன் வழியிலேயே உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தகவல் தெரிவிக்கப்பட்டு வந்த மாணவனின் பெற்றோர்கள் மகன் இறந்ததைக் கண்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
boy chokes to death eating 3 pooris
ஹேர் டிரையர் வெடித்ததில் ஒரு கையை இழந்த பெண் முழு விவரம்