Health benefits of black cumin கருஞ்சீரகத்தின் 10 முக்கிய பயன்கள்
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள்
Health benefits of black cumin ஆங்கிலத்தில் `Black cumin’, `Small Fennel’ என்று, அழைக்கபடும் கருஞ்சீரகம் பல்லாயிரம் ஆண்டுகளாக மருத்துவத்தில் முக்கிய பங்காற்றி வரும் இந்த கருஞ்சீரகம் “ இறப்பைத் தவிர மற்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டது’ என்று நபிகள் நாயகம் குறிப்பிட்டிருக்கிறார் என்று கூறப்படுகிறது
கருஞ்சீரக எண்ணெய்யை யுனானி மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. மேலும் அரபு நாடுகளில் கருஞ்சீரகத்தை உணவில் பயன்படுத்துகிறார்கள்.
அதிக மருத்துவக் குணங்களை கொண்ட கருஞ்சீரகத்தின் விதையில் உள்ள தைமோகுயினன் (Thymoquinone) என்ற வேதிப்பொருள் வேறு எந்தத் தாவரத்திலும் இல்லை.
கருஞ்சீரகம் நோய் எதிர்ப்பு சக்தியை தரக்கூடியது. இதில் உள்ள நன்மை செய்யும் கொழுப்பு , கெட்ட கொழுப்பை குறைக்க உதவும். மேலும், இதில் அமினோ அமிலங்கள், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, நார்ச்சத்துக்கள்,வைட்டமின் A , B, B12, C, நியாசின், உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன.
வீக்கத்தை தணிக்க
கருஞ்சீரகத்தில் வீக்கத்தை தணிக்கும் சக்திவாய்ந்த ஆன்டி இன்பிளமேட்டரி உள்ளது இது உடலில் ஏற்படும் வீக்கங்களை குறைக்க உதவுகிறது. மேலும் கருஞ்சீரக எண்ணெயை, கால் மூட்டுகளிள் தடவினால் நல்ல பலனை கிடைக்கும்.மேலும் ஆயுர்வேத மருத்துவத்தில் கருஞ்சீரக எண்ணெயை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது
சுவாசப் பிரச்னைகள்
ஆஸ்துமா போன்றா சுவாசப் பிரச்னைகள் தடுத்து உடலுக்கு எதிர்ப்பு சக்தியைத் தருகிறது. இளம் சூடான நீரில் 1/2 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் 1/2 தேன் கலந்து பருகி வர சுவாசப் பிரச்னைகள் தீரும். தொடர் இருமலால் பாதிக்கப்பட்டவர்கள் 1 டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் , 1/2 டீஸ்பூன் அரைத்த பூண்டு விழுதுடன் தேன் சேர்த்துச் சாப்பிட்டு வர நுரையீரலில் தேங்கியிருக்கும் சளியை அகற்றும்.
புற்றுநோயில் இருந்து பாதுகாக்க
கருஞ்சீரகம் எலும்பு மஜ்ஜை உற்பத்தியைச் சீராக்கி, புற்றுநோய்க் கட்டிகள் ஏற்படாதவாறு பாதுகாக்கும். குறிப்பாக,(பான்கிரியாட்டிக் புற்றுநோய்) கணையப் புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதில் கருஞ்சீரகம் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும் உடலில் உள்ள புற்றுநோயை உருவாக்கும் ப்ரீ ரேடிகல்ஸ்களை எதிர்த்து போராடும் கருஞ்சீரகம் மார்பக புற்றுநோய், செர்விகல் கேன்சர், நுரையீரல் புற்றுநோய், போன்ற புற்றுநோய்களுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.
நினைவுத்திரன் அதிகரிக்க
கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து வைத்துகொண்டு தினமும் காலை வெறும் வயிற்றில் சிறுவர்களுக்கு 1/4 தேக்கரண்டி கருஞ்சீரக பொடியுடன் தேன் கலந்து சாப்பிட்டு கொடுத்து வர மூளை சுரு – சுருப்பாக செயல்பாடும் மேலும் நினைவுத்திறனை அதிகரிக்க உதவும்.வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவுத்திறன் குறைவுக்குகருஞ்சீரகத்தை, புதினா இலைகள் சேர்த்து பயன்படுத்தி வந்தால், அது அல்சைமர் போன்ற நரம்பு மண்டல பாதிப்புகளுக்கான சிறந்த தீர்வாக அமையும் என்று ஆயுர்வேத மருத்துவத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நீரிழிவை நோயை தடுக்கிறது
கருஞ்சீரகம் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. இதை பிளாக் டீ உடன் சேர்த்து பருகி வர டைப் 2 நீரிழிவு நோயாளிகள் நல்ல பலன் பெறலாம். இதய பராமரிப்பு கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் திரன் கொண்ட கருஞ்சீரகம் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது ,கருஞ்சீரகத்தை பொடி செய்து தினமும் பாலில் கலந்து குடித்து வர நல்ல பலன் பெறலாம்.
பற்களின் பராமரிப்பு
தர்பொழுது எல்லா ஆயுர்வேத பற்பசயிலும் கருஞ்சீரகத்தின் பயன்பாட்டை பார்க்கலாம், கருஞ்சீரகம் பற்கள் மட்டும அல்ல,ஒட்டுமொத்த வாய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ஈறுகளின் பாதுகாப்புக்கு சிறந்த தீர்வாக அமைகிறது. பல் வலிக்கு உடனடி தீர்வாக கருஞ்சீரகம் விளங்குகிறது.
முடி மற்றும் தோல் பராமரிப்பு
தோல் நோய்களுக்கு கருஞ்சீரகம் நல்ல மருந்தாகும், கரப்பான், சொரியாசிஸ் போன்ற தோல் நோய்களுக்கு, கருஞ்சீரகத்தைப் பொடியாக்கி தேய்த்துக் குளித்து வர நோயின் தீவிரம் குறையும் மேலும் அதனால் ஏற்பட்ட புண்களும் தழும்புகளும் மறையும். சருமம் மற்றும் முடிகளின் பராமரிப்பிற்கு, கருஞ்சீரகம் முக்கிய பங்காற்றுகிறது. நல்ல பளபளப்பான சருமத்திற்கு, கருஞ்சீரக எண்ணெயுடன் , எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகம் பருக்கள் நீங்கி பளபளப்பாகும். மேலும் கருஞ்சீரகத்தை சீயக்காய் பொடியில் செர்த்து அரைத்து பயன்படித்திவந்தால் முடியின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதோடு , முடி உதிர்வை கட்டுப்படுத்துகிறது. சாதாரணமாக குளியல் பொடிகளில் இதைச் சேர்த்துப் பயன்படுத்தலாம் நல்ல பயன் தரும்.
உடல் எடையை குறைக்க
கெட்ட கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தும் திரன் கொண்ட கருஞ்சீரகத்தை, பொடியாக்கி தினமும் வெதுவெதுப்பான நீரில், கலந்து குடித்து வர , உடல் எடை குறைப்பில் நல்ல மாற்றத்தை காணலாம்.
சிறுநீரகத்தை பராமரிக்கிறது
கருஞ்சீரகம் கிரியாட்டினின் சீரம் அளவை அதிகப்படுத்தி ரத்தத்தில், யூரியாவின் அளவை கட்டுப்படுத்துகிறது.ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர், தேன் கலந்து பருகி வர சிறுநீரகத்தில் ஏற்படும் கற்கள், பித்தப்பைக் கற்களும் கரையும். மற்றும் சீறுநீரக பாதிப்புகளுக்கு தீர்வு அளிப்பதோடு நீரிழிவின் காரணமாக, சிறுநீரகத்தில் ஏற்படும் பாதிப்புகளை களைய குறைக்க கருஞ்சீரகம் பயன்படுகிறது. மாதவிடாய் பிரச்சனை தீர மாதவிடாய்க் காலங்கலளில் வயிற்று வலி, ரத்தப்போக்கு உள்ளிட்ட மாதவிடாய்ச் சிக்கல்களை சரி செய்யும் கருஞ்சீரகம் வயிறு கனம் குறைந்து நன்றாகச் சிறுநீர் வெளியேற உதவும். பிற நன்மைகள் மலச்சிக்கலுக்கு குணபடுத்தி , மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது, மேலும் வயிற்றுப்புண்கலை குணப்படுத்துகிறது. இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, பல மருத்துவக் குணங்கள் நிறைந்த கருஞ்சீரகத்தை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொள்வது உடல் நலத்துக்கு நன்மை தரும்.
Health benefits of black cumin
For More Information Click Here
https://en.wikipedia.org/wiki/Nigella_sativa#:~:text=Medical%20research,-One%20meta%2Danalysis&text=sativa%20has%20a%20short%2Dterm,cholesterol%2C%20while%20raising%20HDL%20cholesterol.