Hibiscus benefits and uses செம்பருத்தி பூவின் 10 பயன்கள்
மருத்துவ குணங்கள் நிறைந்த செம்பருத்தி பூ
Hibiscus benefits and uses ஆங்கிலத்தில் Hibiscus என்று அழைக்கபடும் செம்பருத்தி பூவின் செடியின் இலை மற்றும் பூக்களில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.
சிவப்பு, மஞ்சள், வெள்ளை, ஆரஞ்சு, ரோஸ், என பல வண்ணங்களிலும் அடுக்கு செம்பருத்தி ஒற்றை செம்பருத்தி என கானப்பட்டாலும் சிவப்பு செம்பருத்தி பூ தான் மருத்துவதிர்க்கு பயன்படுத்தப்படுகிரது. மேலும் இதில் ஏராளமான ஆரோக்கியம் தரும் நன்மைகளும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், அந்தோசயினின்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற அத்தியாவசிய சேர்மங்களும் உள்ளன.
இந்த செம்பருத்திப் பூ இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவையும் குளிர்ச்சி தன்மை உடையது. செம்பருத்திப் பூ மூலிகை மருந்துகளாக உலகம் முழுவதும் ஆயுர்வேதத்தில் பயன்படுகிரது
செம்பருத்திப் பூக்கள் பித்தத்தை குறைக்கும் மேலும் இரத்த கசிவு எதிர்ப்பு பண்புகளும் கொண்டது மேலும் செம்பருத்தி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது அது மட்டும் இன்றி இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவதோடு, ஒற்றைத் தலைவலி, முகப்பருக்கள், அசிடிட்டி, அல்சர் ,மூலம், தூக்கமின்மை, சிறுநீர் பாதை தொற்று மற்றும் இரத்தப்போக்கு பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது.
செம்பருத்திப் பூக்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிப்பதோடு மட்டுமின்றி சரும அழகுக்கும் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிரது.
செம்பருத்தி பூக்களை தினமும் நம் உணவில் செர்க்கும் முரைகள்
செம்பருத்தி டீ (tea)
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூக்கள் – 5
தண்ணீர் – 200ml
(நாட்டு சர்கரை தவை பட்டால் மட்டும் சிரிது சேர்க்கலாம் )
செய்முறை
ஒரு பாதிரத்தில் 200ml நீருடன் 5 செம்பருத்தி பூக்களை சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைத்து அதில் தேவைப்பட்டல் நாட்டு சர்கரை சேர்த்து கலக்கி வடிகட்டி, குடிக்கலாம். அல்லது அதிகாலவு செம்பருத்தி பூக்கள் கிடைத்தல் அதை காம்பு நீக்கி காயவைத்து ஒரு டப்பாவில் செகரித்து வைத்து தினமும் டி துள்லுடன் செர்த்து கொதிக்கவைத்து டி தையார் செய்து குடிக்கலாம்.
இது உடலில் பித்ததை குரைக்கும் மேலும் இரவில் அதிக நேரம் கண்விழித்து வேலை பார்ப்பவர்களுக்கு உடல் சூட்டினால் எற்ப்படும் முடி உதிர்வை தடுக்கும். உடல் சூடு மற்றும் பித்தத்தை சீராக்க செம்பருத்தி டீ யை குடிக்கலாம்.
தலைமுடிக்கு செம்பருத்தி ஹேர் பெக் (hair pack)
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூக்கள் 5 – 10
செம்பருத்தி இலைகள் 5-10
தேங்காய் பால் – 50 ml
செய்முறை
செம்பருத்தி பூக்கள்லுடன் செம்பருத்தி இலைகள், தேங்காய் பால் சேர்த்து மிக்சியி அரைத்து தலையில் தெய்த்து 15-20 நிமிடம் ஊறவைத்து பின் அலசவும். இந்த பேக்கை வாரத்துக்கு ஒரு முரை பயன்படுத்தி வர இளநரை நீங்கி, முடி உதிர்வை தடுத்து முடி பலபலப்பாக இருப்பதோடு நன்கு வளரவும் உதவும்.
தலைமுடிக்கு செம்பருத்தி எண்ணெய்
தேவையான பொருட்கள்
செம்பருத்தி இலைகள் – 5
செம்பருத்தி பூக்கள் – 10
தேங்காய் எண்ணெய் – 250 ml
செய்முறை 250ml தேங்காய் எண்ணெயில் செம்பருத்தி இலைகள், செம்பருத்தி பூக்கலை சேர்த்து அடுப்பில் கொதிக்க விடவும் பின் நன்கு ஆறிய பிறகு இதனை வடிகட்டி சுத்தமான கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைத்து தினமும் பயன்படுத்தலாம்.
இரத்த சோகைக்கு செம்பருத்தி
தேவையான பொருட்கள்
செம்பருத்தி பூக்கள் 20-30
தேன் – ½ டீஸ்பூன்
செய்முறை
செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி நன்றாக பொடித்துக் கொள்ளவும். இந்த பொடியை ஒரு பாட்டிலில் சேமித்து வைத்து. தினமும் இரண்டு முறை 1/2 டீஸ்பூன் தேனுடன் சிறிதளவு செம்பருத்தி பொடி கலந்து சாப்பிட்டு வர ரத்த சோகை சரி ஆகும்.
மேலும் சர்க்கரை நோய், நரைமுடி, முடி உதிர்தல், கொலஸ்ட்ரால், மாதவிடாய் வலி, அசிடிட்டி, உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதர பித்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சுவயான செம்பருத்தி ஜெல்லி செய்முறை
CLICK HERE
Hibiscus benefits and uses