எல்ஜசி சேவையை வாட்ஸப்பில் பயன்படுத்துவது எப்படி
எல்ஜசி சேவையை வாட்ஸப்பில் பயன்படுத்துவது எப்படி
எல்ஐசி பாலிசிதாரர்கள், 8976862090 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் HI என அனுப்பி வாட்ஸப் மூலம் பல சேவைகளைப் பயன்படுத்த முடியும் என எல் ஜ சி நிறுவனம் அறிவித்துள்ளது
எல்ஐசி என்றால் என்ன
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தியாவில் ஆயுள் காப்பீடு என்பது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பே அறிமுகமானது.
ஆயுள் காப்பீடு என்பது இந்திய அரசுக்கு சொந்தமான ஒரு முதலீட்டு நிறுவனம் ஆகும். LIC என்பதை ஆங்கிலத்தில் Life Insurance Corporation என்று அழைக்கப்படுகிறது.இந்த ஆயுள் காப்பீட்டு கழகமானது செப்டம்பர் 1, 1956 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனம் ஆகும்.
ஆயுள் காப்பீடு என்பது காப்பீடு செய்யப்பட்ட நிகழ்வின் போது உறுதியளிக்கப்பட்ட நபருக்கு (அல்லது அவர் பரிந்துரைக்கப்பட்டவருக்கு) ஒரு தொகையை செலுத்த உறுதியளிக்கும் ஒப்பந்தமாகும்.ஒப்பந்தத்தின் போது காப்பீடு செய்யப்பட்ட தொகையை செலுத்துவதற்கு செல்லுபடியாகும்:» முதிர்வு தேதி, அல்லது» குறிப்பிட்ட கால இடைவெளியில் தேதிகள், அல்லது» துரதிருஷ்டவசமான மரணம், அது முன்னதாக நடந்தால்.மற்றவற்றுடன், பாலிசிதாரரால் கார்ப்பரேஷனுக்கு குறிப்பிட்ட கால இடைவெளியில் பிரீமியத்தை செலுத்தவும் ஒப்பந்தம் வழங்குகிறது.
குழந்தைகளின் கல்வி, வாழ்க்கைத் தொடக்கம் அல்லது திருமண ஏற்பாடு அல்லது குறிப்பிட்ட கால இடைவெளியில் பணத்திற்கான தேவைகள் போன்றவை பாலிசி பணத்தை ஒருவர் சேவையிலிருந்து ஓய்வுபெறும் நேரத்தில் கிடைக்கச் செய்து, வீடு வாங்குதல் அல்லது பிற முதலீடுகள் போன்ற எந்தவொரு குறிப்பிட்ட
நோக்கத்திற்காகவும் பயன்படுத்தலாம். மேலும், பாலிசிதாரர்களுக்கு வீடு கட்டுவதற்கு அல்லது பிளாட் வாங்குவதற்கு (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு) கடன் வழங்கப்படுகிறது
இந்த எல்ஜசி சேவையை வாட்ஸப்பில் பயன்படுத்துவது எப்படி:-
இந்த வாட்ஸ் அப் சேவையானது எல்ஐசி போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட பாலிசிதாரர்களுக்கு கிடைக்கும்.
இதுகுறித்து ஆயுள் காப்பீட்டு நிறுவனம் அறிவித்துள்ள செய்தியில், “எல்ஐசி போர்ட்டலில் பாலிசிகளைப் பதிவு செய்த பாலிசிதாரர்கள், 8976862090 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப்பில் “ஹாய்” என்கிற செய்தியை அனுப்பி இந்த சேவைகளைப் பயன்படுத்த முடியும்” என்று தெரிவித்துள்ளது.
வாட்ஸ்அப்பில் கிடைக்கும் எல்ஐசி சேவைகளின் பட்டியல்: செலுத்த வேண்டிய பிரீமியம் போனஸ் பற்றிய தகவல்கள் பாலிசியின் நிலை கடன் தகுதிக்கான கொட்டேஷன் கடன் திருப்பிச் செலுத்துவதற்கான கொட்டேஷன் கடனுக்கான வட்டி செலுத்தும் தகவல் பிரீமியம் செலுத்திய சான்றிதழ் ஸ்டேட்மென்ட் எல்ஐசி சர்விஸ் இணைப்புகள் மேலும்பல தகவல்களை வாடிக்கையாளர்கள் வாட்ஸ்அப்பில் பார்க்கலாம்
அருமையான தகவல்கள்