health

Pomegranate benefits in Tamil தினமும் மாதுளம்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் 10 பயன்கள் என்ன

Mathulai Benefits in Tamil மாதுளம் பழ தோலின் நன்மைகள் என்ன முழு விவரம்

Pomegranate benefits in Tamil பொதுவாக 100 கிராம் மாதுளம் பழத்தில் 83 கலோரிகள் உள்ளன. அதில் 1.2 கிராம் கொழுப்பு, 1.7 கிராம் புரதம், 19 கிராம் மாவு சத்து மற்றும் 4 கிராம் நார்ச்சத்து அடங்கும். மேலும் 10.2 மி.கி வைட்டமின் சி மற்றும் 0.60 மில்லி கிராம் வைட்டமின் இ மற்றும் 16.4 மைக்ரோ கிராம் வைட்டமின் கே சத்துக்கள் உள்ளது அதேபோல் மாதுளம் பழத்தில் 0.30 மி.கி இரும்பு சத்து, 10.00 மி.கி கால்சியம் மற்றும் 236 மி.கி பொட்டாசியம் உள்ளது. மாதுளம் பழ விதையில் “Punicic Acid” என்னும் அமிலம் உள்ளது மாதுளம்பழம், பூ, தோல் என அனைத்தும் பல மருத்துவ குணங்கள் உள்ளன

மாதுளையில இனிப்பு, புளிப்பு, துவர்ப்புனு மூனுவகை சுவைகளும் உள்ளது தினந்தோறும் மாதுளை ஜூஸை தொடர்ந்து 30 நாட்கள் குடித்து வந்தால் பெண்களின் மாதவிடாய் பிரச்சனை நீங்கும். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமாக இருக்க பெரிதும் உதவுகின்றது உங்கள் நினைவாற்றல் அதிகரிக்கும்.

மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும்

ஞாபகசக்தியை அதிகரிக்கச் செய்யும் ரத்த நாளங்கள் தளர்வடைந்து, அதிக அளவில் ஆக்சிஜனைக்கொண்ட ரத்தம் இதயத்துக்குச் சென்று, இதயம் பலம் பெறும். செரிமானப் பிரச்சனைகளைச் சீராக்கி, உடல் எடை குறைக்க மாதுளை உதவுது.

சர்க்கரைநோயை கட்டுப்படுத்துறதுக்கு துணைபுரியுது. உங்கள் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

அதேபோன்று சிலர் வறட்டு இருமலால், சரியாக சாப்பிட முடியாமல், தூங்கமுடியாமல் என அவதிப்பட்டு கொண்டு இருப்பார்கள். அவர்கள் மாதுளம் பூக்களை உலர்த்தி, வேளைக்கு ஒரு சிட்டிகை என சாப்பிட்டு வந்தால், இருமல் நிற்கும்.

அதுப்போல, மாதுளம் பழச்சாறும், இஞ்சி சாறும் சம அளவு கலந்து, அதில் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து குடிக்க நாள்பட்ட வறட்டு இருமல் ஆக இருந்தாலும் சரி, அது முற்றிலும் நீங்கும். அதேபோல் குடற்புண் குணமாகிறது.

பெருங்குடல் வியாதியை சரி செய்கின்றது, இன்னும் இதயம் மற்றும் சிறுநீரகத்தை இதமாய் வேலை செய்ய ஊக்குவிக்கிறது

Pomegranate benefits in Tamil
Pomegranate benefits in Tamil

மாதுளம் பழ தோல்:-

மாதுளம் பழத்தை சாப்பிட்டிட்டு விட்டால் அதன் தோலை நாம் வெளியே போடவேண்டாம்

மாதுளம்பழ தோலை சுத்தப்படுத்தி நன்றாக கழுவி, வெயில்ல காய வச்சு, அதனை பொடிசெஞ்சு வச்சிக்கோங்க. ஒரு ஸ்பூன் மாதுளம் தோல் பொடியோட கொஞ்சம் தேன் கலந்து குழைச்சு முகத்துல தடவி, 15 நிமிடங்கள் கழிச்சு கழுவிவந்தால் முகம் பொலிவு பெறும். அதேபோல் பிக்மண்டேஷன் உள்ளவர்கள் இதை வாரம் இரண்டு முறை முயற்சி செய்து பார்த்தால் நல்ல பலன் கிடைக்கும்

அப்பறம் என்ன உடனே மாதுளம்பழம் வாங்குங்க ஜீஸை சாப்பிடுங்க, தோலை பொடியாக்கி சருமத்திற்க்கு பயன்படுத்துங்க

Pomegranate benefits in Tamil

More Details 

விக்கி பீடியா

Related Articles

Back to top button