ward boy performed surgery பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய் அதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த அதிர்ச்சி சம்பவம்

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய் அதை வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த அதிர்ச்சி சம்பவம்
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பெண்ணுக்கு ஒரு வார்டு பாய் அறுவை சிகிக்கை செய்த சம்பவம் பெரூம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் அறுவை சிகிச்சை செய்ததோடு அதை வீடியோவாக பதிவு செய்து அவனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பஸ்தி மாவட்டத்தில் ஹர்தியாவில் அமைந்துள்ள பஸ்தி கேர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை மற்றும் கண் மையத்தில் ஆபரேஷன் தியேட்டரில் பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்களுக்கு வார்டு பாய் உதவி செய்வதும் அந்த அறுவை சிகிச்சை நடைமுறைகளை வீடியோவாக பதிவு செய்து அதை தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்சில் வைத்தள்ளார் அந்த வார்டு பாய்.

வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த மக்கள், அந்த வார்டு பாயின் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்படி மருத்துவமனை நிர்வாகத்தை சமூக வலைதளங்களில் வலியுறுத்தினர்.
விசாரணையில் அந்த மருத்துவமனையில் இயக்குநராக பணியாற்றிவரும் சஞ்சய் குமாரின் அறிவுறுத்தலின் பேரில் அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ததாகக் அந்த வார்டு பாய் விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து மருத்துவமனை இயக்குநர் சஞ்சய் குமார் இந்த சம்பவம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று கூறியுள்ளார்
இதை தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் மீது விசாரணை நடத்த சுகாதாரத்துறை ஒரு குழுவை அமைத்து வார்டு பாயின் செயலுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இது போன்ற அலட்சியத்தை பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும், குற்றவாளிகள் இதுபோன்ற இழிவான செயலுக்கு கடுமையான தண்டிக்க படுவார்கள் என்றும் சுகாதாரத்துறை தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் யாறும் புகார் தெரிவிக்க வில்லை அப்படி புகார் கிடைத்ததும் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறையினர் கூறியிருக்கின்றனர்.