30ft long python swallowed woman பெண்ணை உயிரோடு விழுங்கிய 30 அடி மலைப்பாம்பு வீடியோ இணைப்பு

இந்தோனேசியாவின் தெற்கு சுலவேசியில் சந்தைக்கு சென்ற பெண் ஒருவர் மாயமானதாக அறிவிக்கப்பட்டு தேடுதல் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரை மலைப்பாம்பு உட்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
காணாமல்போன மனவியை தேடி காட்டிற்க்கு சென்ற கணவன் 30 அடி நீள ராட்சத மலைப்பாம்பு ஒன்றின் வாயிலிருந்து இரண்டு மனிதக்கால்கள் நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார்.

அது தன் மனைவிதான் என்பது தெரிந்ததும், அடியன்சா உடனடியாக அந்த பாம்பைக் கொன்று தன் மனைவியைக் காப்பாற்ற முயன்றுள்ளார். ஆனால் சிரியாட்டி ஏற்கனவே உயிரிழந்துவிட்டார். மறுநாள் சிரியாட்டியின் உடல் அவரது கிராமத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதமும் சிரியாட்டியின் வீட்டின் அருகிலேயே 50 வயதுப் பெண்ணொருவர் மலைப்பாம்பு ஒன்றினால் உயிருடன் விழுங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகின்றது.
வீடியோ பார்க்க
30ft long python swallowed woman