IMPORTANT NEWS
49 year old man died of eating idly கேரளாவில் உணவு போட்டியில் இட்லி சாப்பிட்டு உயிரிழந்த நபர்

கேரளாவில் உணவு போட்டியில் இட்லி சாப்பிட்டு உயிரிழந்த நபர்
கேரளா மாநிலம் கஞ்சிக்கோடு பகுதியில் ஓணம் பண்டிகையையொட்டி உணவு போட்டி ஒன்று நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அதிக இட்லி சாப்பிடுபவருக்கு பரிசு என அறிவிக்கப்பட்டது.

போட்டியில் அதே பகுதியைச் சேர்ந்த 49 வயதான சுரேஷ் என்பவர் பங்கேற்றுள்ளார். சுரேஷ் போட்டியின் போது சாப்பிட்ட இட்லி தொண்டையில் சிக்கியதால், அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக கூறபடுகிறது . எனவே, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
உணவு போட்டியில் இட்லி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
49 year old man died of eating idly