4false teeth in chocolate சாக்லேடில் இருந்த பல் செட் அதிர்ந்து போன பள்ளி முதல்வர்

சாக்லேடில் இருந்த பல் செட் அதிர்ந்து போன பள்ளி முதல்வர்
உணவு மற்றும் உணவு ஆர்டர்களில் வித்தியாசமான பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு அதிர்ச்சியான சம்பவம் இது மத்திய பிரதேச மாநிலம் கர்கோனில் ஓய்வுபெற்ற பள்ளி முதல்வர் மாயாதேவி குப்தா, சாக்லேட் பாரில் (பல் செட்டு) பற்கள் இருப்பதைக் கண்டு அதிர்ந்தார்.
ஒரு பிறந்தநாள் விழாவில் கலந்து கோண்டப்போது மாயாதேவி குப்தாவுக்கு ஒரு சாக்லேட் வழங்கப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அவர் அந்த சாக்லேட்டை உட்கொண்டபோது, வழக்கத்திற்கு மாறாக கடினமான ஒன்றைக் அவர் கடித்துள்ளார். இது சாக்லேட்டின் மொறுமொறுப்பான பகுதி என்று நினைத்துள்ளார்

இருப்பினும் அவரல் அதை கடிக்க முடியாத நிலையில் திருமதி குப்தா அந்த சாக்லேட்டை வாயிலிருந்து வெளியே எடுத்து பார்தபோது சாக்லேட்டில் நான்கு பொய்யான பற்கள் (பல் செட்) இருப்பதைக் கண்டு அதிர்ந்து போனார்.
உடனே அவர் கர்கோனில் உள்ள மாவட்ட உணவு மற்றும் மருந்து துறையிடம் இதை பற்றி புகார் அளித்தார். உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அதிகாரி எச்.எல்.அவாசியா புகாரின் அடிப்படையில் ஒரு குழு அமைத்து சாக்லேட்டுகள் வாங்கப்பட்ட கடையில் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டன, மேலும் அவை மேல் விசாரணைக்காக போபாலில் உள்ள துறையின் ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் என்று தெரிவித்துள்ளார்
4false teeth in chocolate